பக்கம்:காப்டன் குமார்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சாந்தியோ, "என்னை அண்ணாகிட்டே எப்போ கூட்டிக் கொண்டு போகப் போறிங்க??? என்று விட்ட இடத்திலே பிடித்துக் கொண்டாள். போகலாண்டா கண்ணு. நாளைக்கே நாம் எல்லோரும் ஏரோப்பிளேனிலே ஏறிப்போய் - உங்க அண்ணாவுக்கு முந்தி ஊருக்குப் போயிடலாம்” என்று மனைவிக்குச் சந்தர்ப்பமே கொடுக்காமல் கூறினார் கருணாகரன். குழந்தையின் அன்பைத் தம் மனைவியைவிடத் தாம் அதிகம் கொள்ளை கொண்டுவிட வேண்டும் என்கிற பரபரப்புத்தான் • [5|(یعے சாந்தி உடனே, "இதுகூட நம்மோட வருமா, அப்பா??? என்று கற்பகம்மாளைச் சுட்டிக் காட்டிக் கேட்கவும் இருவர் முகத்திலும் அசடு வழிந்தது. குழந்தையிடம் போய் அஃறிணை, உயர்திணை எல் லாம் எதிர்பார்க்கலாமா? தம்மை, அப்பா’’ என்று கூப்பிட்டுவிட்ட மகிழ்ச்சியில் மிதந்தார் கருணாகரன். ■ சாந்தி கற்பகம்மாளின் முகத்தைத் திருப்பி, எ‘ஏம்மா! அண்ணாவும்...ஏரோப்பிளேனிலே வரு வானா??? என்றாள். -

  • ஆசையைப் பாரு’ என்று எண்ணிய கற்பகம் மாள், இல்லேம்மா, அண்ணாதான் கப்பலிலே வறானே?’ என்றாள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/57&oldid=791306" இலிருந்து மீள்விக்கப்பட்டது