பக்கம்:காப்டன் குமார்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 அதிர்ஷ்டவசமாக இந்தியா செல்ல மாறுநாளே பிளேனில் அவர்களுக்கு டிக்கெட்டுகள் கிடைத்துவிட் டன. கருணாகரன் தம் மனைவி, சாந்தியுடன் பர்மா மண்ணுக்கு வணக்கம் சொல்லிவிட்டு விமானத் திலே பறந்து கொண்டிருந்தார். ஏரோப்பிளேனில் ஏறியதும் சிறிது பயந்த சாந்தி பிறகு தைரியமாகி விட்டாள். விமான உபசரிணிக் குச் சாந்தியை மிகவும் பிடித்துப் போய்விட்டது. தங்க விக்கிரகம் போன்ற சிறுமியை யாருக்குத்தான் பிடிக்காது? சாக்கலேட்டுகளை வாரி வாரிக் கை நிறையச் சாந்தியிடம் கொடுத்துக்கொண்டே இருந் தாள். எனவே, சாந்திக்கும் விமான உபசரிணியை மிகவும் பிடித்துப் போய்விட்டது. விமானம் மேலே பறந்து கொண்டிருந்தது. கீழே கடலைப் பார்க்க முடியாதபடி சாந்தியை மடி யில் கிடத்தி மெள்ளத் தட்டிக் கொடுத்தாள் கற்பகம்மாள். ஆம்; கடலைக் காட்டினால், கப்பலைக் காட்ட வேண்டும்; பிறகு அதில் அவள் அண்ணனைக் காட்டவேண்டும். வம்பு எதற்கு? நான்கு மணி நேரத்திற்குள் கருணாகரன் தம்பதிகள் தங்களது சென்னை வீட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டனர். சாந்திக்கு விளையாடுவதற்கு என்று சைனா பஹாரிலிருந்து நிறையப் பொம்மைகளை வாங்கி வந்திருந்தார் கருணாகரன். ஆனால் அத்தனை дът-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/60&oldid=791314" இலிருந்து மீள்விக்கப்பட்டது