பக்கம்:காப்டன் குமார்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மீண்டும் பழைய சிந்தனை விரிந்து படம் எடுத்தது. அன்று இரவு முழுவதும் கற்பகம்மாள் தூங்கவே இல்லை. ‘என்ன ஆனாலும் சரி, சாந்தியை விடக் கூடாது. வேண்டுமானால் அவள் அண்ணனையும் இங்கேயே அழைத்து வைத்துக் கொண்டு விடுவது? என்கிற ஒரு முடிவுக்கு அவள் மனம் வந்து விட்டது. பொழுது விடிந்தது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாவே கருணாகரனும் கற்பகம்மாளும் சாந்தியை அழைத்துக் கொண்டு துறைமுகத்திற்கு வந்துவிட்டனர். கப்பல் வந்தது. விதம் விதமான மனிதர்கள் இறங்கியவண்ணமிருந்தனர். அதில் பாதிக்குமேல் கருணாகரனுக்குப் ப ம ர் த் த முகங்களாகவே தோன்றின. ஆனால் அதே முகங்களை இன்று அவரால் அரை நிமிஷம் கூட நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. வாழ்க்கையே பாலைவனமாகி, வாழ்வே வேம் பாகி அல்லவா அதனை பேரும் வருகிறார்கள்? உடைமைகளை யெல்லாம் பிடுங்கிக் கொண்டனர். உழைத்து உழைத்துச் சக்கையான உடல்தான் அவர்களுக்குச் சொத்து. அதை மூலத் தனமாகக் கொண்டுதான் இனிமேல் அவர்கள் புது வாழ்வை ஆரம்பிக்க வேண்டும்! கனவுலகிலே சஞ்சரித்துக் கொண்டிருந்த கணவரின் கரத்தைப் பிடித்து உலுக்கினாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/63&oldid=791321" இலிருந்து மீள்விக்கப்பட்டது