பக்கம்:காப்டன் குமார்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 கற்பகம்மாள். என்னங்க...கப்பல் முழுவதும் காலி யாகிக்கிட்டே இருக்கு, நம்ம பையனைக் கானோமே??? சட்டென்று விழித்துக் கொண்டார் அவர். *நீ இதுவரை நன்றாகப் பார்த்துக் கொண் டேதானே வந்தாய்??? - தம்மீதே நம்பிக்கையில் லாமல்தான் அவர் அப்படிக் கேட்டார். ஆம்ாம்...சாந்தியும் நானும் வருகிற ஒரு பையன் விடாமல்தான் பார்த்துக் கொண்டே வந் தோம். இதுவரை போனவர்களில் அவளுடைய அண்ணா இல்லவே இல்லையாம்!’’. சட்டென்று கருணாகரன் ஒரு முடிவுக்கு வந் தார். குழந்தையின் மனத்தை வீணாகக் கலவரப் படுத்தக் கூடாது அல்லவா? சேரி, நீ சாந்தியை அழைத்துக்கொண்டு காரில் போய் இரு. மீதமிருப்பவர்களையும் பார்த்துவிட்டு, நான் காப்டனைச் சந்தித்து விஷயத்தைத் தெரிந்து கொண்டு வருகிறேன். ஆமாம்... பையனின் பெயர் என்ன?... குமார்தானே?’ என்று இடையே ஒரு சந்தேகத்தையும் தீர்த்துக்கொண்டு உள்ளே சென் றார். ஆனால் குமாரைப்பற்றிக் கப்பல் அதிகாரியின் மூலம் அவர் அறிந்த செய்தி கருணாகரனுக்கு ஒரு கணம் இருதயமே சுக்கு நூறாகச் சிதறி விடும்போல் இருந்தது. குமார் யாரும் அறியாமல் கடலில் குதித்து விட்டானாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/64&oldid=791323" இலிருந்து மீள்விக்கப்பட்டது