பக்கம்:காப்டன் குமார்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 படுக்கப் போட்டுக் கொண்டதுவரை அவர் விவரித் தார். அவன் எல்லோருக்கும் உணவு பரிமாறியதை யும், படுக்கை விரித்துக் கொடுத்ததையும் சொல்லி வருந்தினார். 'காலையில் கண் விழித்ததும், முதலில் அவ னைத்தான் தேடினேன். பக்கத்தில் அவனைக் காணவில்லை. பிறகு என்ன சொல்ல இருக்கிறது சார்? கப்பலில் இருந்த எல்லோரும் என்னவோ என் னைத்தான் பெரிதாகத் துக்கம் கேட்டுக்கொண்டே வந்தார்கள்’’ என்று கூறிக் கொண்டு வந்தவர் சட் டென்று பேச்சை நிறுத்திக் கருணாகரனை ஒரு கணம் உற்றுப் பார்த்தார். -- ஆமாம், நீங்கள் யார்... சொல்லவே இல்லையே! குமாருடைய மாமாவோ??? கருணாகரன் லேசாகச் சிரித்தார். நீங்கள் குமாருக்கு என்ன வேண்டும்??? என்று ஒர் எதிர்க் கேள்வி போட்டார். பெரியவர் மெளனம் சாதித் தார். 'அந்த உறவுதான் எனக்கும் அவன்! பர்மாத் துறைமுகத்திற்கு ஒரு காரியமாக மனைவியுடன் வந் திருந்தேன். அப்போது குமாரின் தங்கை சாந்தி சுங்கச் சாவடி வாசலில் அழுதுகொண்டு நின்றிருந் தாள். எங்களுக்குக் குழந்தைகள் இல்லை. அந்தப் பெண்ணைப் பார்த்ததும் ஏதோ ஒருவிதப் பாசம் ஏற்பட்டு விட்டது. அடுத்த கப்பலில் நாங்களும் புறப்படுவதாக இருந்தோம். சுங்க அதிகாரியிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/67&oldid=791329" இலிருந்து மீள்விக்கப்பட்டது