பக்கம்:காப்டன் குமார்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 சொல்லிச் சாந்தியை எங்களுடன் அழைத்துச் சென் றேன். ஆனால் அடுத்த கப்பல் கிளம்பும் வரை அவளை வைத்துக் கொண்டு சமாளிக்க முடிய வில்லை. உடனே அண்ணாவிடம் போயாக வேண்டும்: என்று அடம் பிடித்தாள்; அழுதாள். உடனே நாங் களும் பிளேனிலேயே இவளுக்காகப் புறப்பட்டு இங்கே வந்து கப்பலை எதிர்நோக்கிக் காத் திருந்தோம். 'குழந்தை இப்போது என் மனைவியுடன் காரில்தான் வெளியே இருக்கிறாள். கப்பலில் வருகிற தன் அண்ணாவை வரவேற்க நேற்று ராத்திரியி லிருந்தே அவள் சரியாகத் தூங்கவில்லை. காலை யில் எங்களுக்கு எல்லாம் முன்னதாகவே எழுந் திருந்து விட்டாள். இனி இப்போது இந்தப் பயங்க்ரச் செய்தியை எப்படி ஐயா, நான் போய்ச் சாந்தியிடம் சொல்லுவேன்?’ என்று கருணாகரன் தாங்க முடியாத துக்கத்தோடு கூறிக்கொண்டு வரும்போதே பெரியவர் குழந்தைபோல் தேம்பித் தேம்பி அழுது விட்டார். 'விதி என்னமாகத்தான் ஐயா விளையாடு கிறது? ஆனால் அதை அதன் போக்கில் விடாமல் மனிதன் மாற்ற முயற்சி செய்யும்போதுதான் ஐயர், எல்லா விபரீதங்களும் நேருகின்றன. குமாரிடம் அடிக்கடி, உன் தங்கைக்கு ஒர் ஆபத்தும் வராது. அவள் செளக்கியமாக அடுத்த கப்பலில் வந்து சேரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/68&oldid=791332" இலிருந்து மீள்விக்கப்பட்டது