பக்கம்:காப்டன் குமார்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வாள்? என்று வழி நெடுக உபதேசம் செய்து கொண்டே வந்தேன். என் பேச்சைக் கேட்டு, கடவுள்பேரில் நம்பிக்கை வைத்துப் பையன் பேசா மல் எங்களுடன் வந்திருந்தால் காரியங்கள் இப் போது எவ்வளவு சுபமாக முடிந்திருக்கும்...ஆனால்! தெய்வ சங்கல்பத்தை மாற்ற நாம் யார்? என்ற பெரியவர், இறுதியில் கருணாகரனைத் தனியே அழைத்துச் சென்று ஒரு யோசனை கூறினார். அதைக் கேட்டதும் கருணாகரனின் முகம் மலர்ந் இது. 'ஆம்! இதைத் தவிர வேறு என்ன பதில் சொன்னாலும் சாந்தி கேட்க மாட்டாள். அவளைச் சமாதானம் செய்வதற்கு இந்த ஒரே வழிதான் இருக் கிறது?’ என்று பெரியவரிடம் விடை பெற்றுக் கொண்டு நேராகத் தம்முடைய காரை நோக்கி நடந்: தார் கருணாகரன். 'சற்று நேரத்திற்கெல்லாம் யாரோ ஒரு பையனைத் தன் கணவர் அழைத்துக்கொண்டு வரப்போகிறார். அவன் எப்படியிருப்பான்? கறுப்பா - அல்லது சாந்தியைப்போலவே நல்ல சிவப்பா?என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டிருந்த கற்பகம்மாள் ஏமாந்தாள். அண்ணனில்லாம் வெறும் கையை வீசிக்கொண்டு வரும் கருணாகரனைப் பார்த் துச் சாந்தியும் ஏமாந்தாள். ஏக காலத்தில் இருவர் மனமும் படபடத்தன. ஏன் எல்லோரையும்விட கருணாகரனின் மனமும்தானே அடித்துக் கொண் டிருந்தது! ஏதோ பயங்கரக் குற்றவாளியைப் போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/69&oldid=791334" இலிருந்து மீள்விக்கப்பட்டது