பக்கம்:காப்டன் குமார்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 ஹாம்...பெரிய இடத்துப் புள்ளே! இந்த ஏழை யோட சாப்பாடு பிடிக்குமா?’ என்று தன் தட்டை காலி செய்து, கடலிலே ஒரு கழுவுக் கழுவி உள்ளே போட்டான் படகோட்டி. குமாரும் கை கழுவியபடியே, ஆமாம்...என் பேரைக் கேட்டீர்களே. உங்கள் பேரைச் சொல்லவே இல்லையே?’ என்றான். ‘எங்களுக்கெல்லாம் தனியான பேர் எது தம்பி? முக்குவன், செம்படவன், படகோட்டி...இப்படி எத்தனையோ...?? இருந்தாலும் வீட்டிலே ஒரு பேர் வைக்காமலா இருப்பார்கள்? இதெல்லாம் தொழில் பெயராச்சே??? என்றான் குமார். 'வைச்சாங்க மன்னாடீன்னு...ஆனால் அந்தப் பேரைச் சொல்லிக் கூப்பிட இப்போ யாருக்கும் பிடிக்கலே. இதைக் கூறும்போது படகோட்டியின் கண்கள் நிலவொளியில் பளபளத்தன.

  • அப்போ வேறன்ன பெயரைச் சொல்லிக் கூப் பிடுகிறார்கள்???

கள்ளத் தோணி!?? 'கள்ளத் தோணி - குமார் மனத்திற்குள்ளேயே ஒரு முறை சொல்லிப் பார்த்துக்கொண்டான். அதில் எவ்வித விசேஷப் பொருளும் அவனுக்கு விளங்க வில்லை; பெயர் என்னவோ-அவன் இதுவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/78&oldid=791354" இலிருந்து மீள்விக்கப்பட்டது