பக்கம்:காப்டன் குமார்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கேள்விப்படாத புது மாதிரியாக இருந்தாலும் - அந் தோணி இல்லையா, அதைப் போல் இருக்கிறது கள்ளத் தோணி என்று எண்ணியிருந்துவிட்டான். திடீரென்று குமாருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. இப்போது நாம் எங்கே போய்க்கொண்டிருக் கிறோம்?’ என்று. ஆனால் சட்டென்று அதைக் கேட்க அவனுக்குத் தைரியமில்லை. அதற்குள் நிலவு மறைந்தது. கிழக்கு வெளுத்து, பெரிய சிவப்பு வட்ட மாகச் சூரியன் கடலிலிருந்து தலையைத் தூக்கி அவர்களைப் பார்த்தான். படகு சந்தடி இல்லாத ஒர் இடத்துக்கு வந்து கரை தட்டியது. குமாரின் கையைப் பிடித்துப் படகிலிருந்து இறக் கினான் மன்னாடி. பிறகு படகை ஒரு முளையில் இழுத்துக் கட்டிவிட்டு அதிலிருந்த வலையைத் தோளில் போட்டுக்கொண்டான். கலயத்தை எடுத்து கொள்ள குனிந்த குமாரை, அது வேண்டாம்... அங்கேயே இருக்கட்டும்’ என்று தடுத்துவிட்டான் கள்ளத்தோணி. இருவரும் சிறிதுதுரம் மணலிலே நடந்துசென்று ஒரு குடிசையின் முன்னே வந்து நின்றனர். கண்ணுக்கெட்டிய வரை ஒரே மணற்காடு. அதைத் தவிர வேறு குடிசை எதுவுமே இல்லை. அந்தக் குடிசையிலும் வேறு யாருமில்லை. குமார் குடிசை முழுவதும் ஒரு கணம் நோட்டம் விட்டன். ஆனால் அதில் மீனவர்களுக்குச் சம்பந்த மில்லாத சாமான்களே இருந்தன. ஆணி, சுத்தியல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/79&oldid=791356" இலிருந்து மீள்விக்கப்பட்டது