பக்கம்:காப்டன் குமார்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 கள்ளிப்பெட்டி, கோணிப்பைகள், அரிவாள்...இப்படி இன்னும் ஏதேதோ! குமாருக்கு ஒரே நாளில் நிலைமை முற்றும் தெளி வாக விளங்கி விட்டது. தான் இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ வேறு எந்தச் சீமைக்கோ போய் விடவில்லை. எல்லாம் பர்மா மண்தான். ரங்கூனி லிருந்து சில மைல்கள் ஒதுப்புறமான இடத்தில்தான் இருக்கிறோம் என்பது விளங்கி விட்டது. அப்படி விளங்கா விட்டாலும் மன்னாடி எதையும் மறைக்க வில்லை. செம்படவர்கள் என்றால்-கடலிலே உழைத்து அதைக் கரையிலே விற்றுப் பணமாக்கிப் பிழைப்பார் கள். ஆனால் அதற்கு நேர்மாறு மன்னாடி. கரையிலே பாடுபட்டான். அதைக் கொண்டு நடுக் கடலிலே காசாக்கினான். போகும்போது படகு, பெட்டிகளையும் துணி மூட்டைகளையும் ஏற்றிச் செல்லும்; வரும்போது கற்றை நோட்டுகளாகத் திரும்பி வரும். நடுக்கடலில் எந்தத் தீவிலே இந்தப் பண்ட மாற்று வியாபாரம் நடக்கிறது என்பது குமாருக்குச் சில நாள் வரைதான் தெரியாமல் இருந்தது. பிறகு 'கள்ளத் தோணி அதையும் சொல்லி விட்டான்; அது ம ட் டு மா? எல்லாவற்றையுமே - தன் பிழைப்பையே சொல்லி விட்டான். அப்போது தான் குமாருக்கும், கள்ளத் தோணி’ என்பது இட்ட பெயரல்ல - பட்டப்பெயர் என்பது புரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/80&oldid=791359" இலிருந்து மீள்விக்கப்பட்டது