பக்கம்:காப்டன் குமார்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 னான் மன்னாடி. காரணம் அவனுக்கு அந்தச் சிறுவன் மீது அளவுக்கு மீறிய நம்பிக்கை விழுந்து விட்டதுதான். ஒருநாள் குமாரிடம் கற்றை நோட்டுக்களை எண்ணிக் கொடுத்தான். போலீசின் கண்களிலே மண்ணைத் தூவ வேண்டிய வித்தைகளையும் கற்றுக் கொடுத்தான் மன்னாடி. இத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்த குமார் கடகடவென்று சிரித்தான். 'நான் என் தங்கையைத் தேடிக் கொண்டு வந்தேன். நீ அதற்கு உதவுவதாகச் சொன்னதால்தான் உன்னுடன் இருக்க ஒப்புக் கொண்டேன். இந்த வேலைக் கெல்லாம் வேறு ஆளைப் பார். ஐயா! என்னையும், கள்ளத் தோணி என்று எண்ணிக்கொண்டாயோ?? என்று குமார் கூறி முடிக்கவில்லை மறுகணம் - பளார்’ என்று ஒரு பேயறை விழுந்த்து அவன் கன்னத்தில்! அப்படியே சுருண்டு போய் மூலையில் விழுந்தான் குமார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/82&oldid=791362" இலிருந்து மீள்விக்கப்பட்டது