பக்கம்:காப்டன் குமார்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 lன்னாடியுடன் பழகிய மிகச்சில நாட்களிலேயே அவனது குணம் குமாருக்கு நன்கு புரிந்து விட்டது. சற்று முன்கோபியே தவிர; அவன் மற்றப்படி நல்லவன்தான். குமார் எழுந்து அவன் அருகில் சென்றான். முகத்திலிருந்த அவனது கைகளை விலக்கினான். ‘என்னை அடித்துவிட்டு, நீ ஏன் அழுகி றாய்??? மன்னாடி அதற்கு முதல்நாள் இரவுதான் தன்னு டைய கதையைக் குமாருக்குக் கூறியிருந்தான்; அவனுக்கு இரண்டு மனைவிகள். மூத்தவள் இறந்த வுடன் அவள் தங்கையையே மணந்து கொண்டான். அவளோ ஒரே பணப் பைத்தியம். தன் கணவன். கடலில் மீனுக்குப் பதில் தங்கக் குஞ்சுகளாகப் பிடித்துக்கொண்டு வரவேண்டுமென்று விரும்பினாள். வேலையைத் துாக்கிக் கொண்டு அலைகிறவரை உன் வீட்டுக்கு நான் வரப்போவதில்லை?” என்று சண்டை போட்டுக் கொண்டு பிறந்த வீடு சென்று விட்டாள். ஆம்! மீனைப் பிடித்துவந்து காசாக்கினால் சோறுதான் தின்னலாம். தங்க நகையும், சீனாப் பட்டும் கட்டிக்கொள்ள முடியுமா? மன்னாடி தனிய னானான். மனைவிக்காகத் தொழில் மாறினான். முழுமூச்சாகக் காசு சேர்த்தான். ஆனால் செய்கிற தொழிலை மட்டும் யாரும் சுட்டிக் காட்டக் கூடாது. கோபம் வந்துவிடும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/84&oldid=791366" இலிருந்து மீள்விக்கப்பட்டது