பக்கம்:காப்டன் குமார்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ஆம்! அவனுக்கே தெரியும் அவன் செய்கிற தொழிலின் மதிப்பு; ஆனால் அவன் தனக்காகவா அப்படிச் செய்கிறான்? மீன் பிடிக்கிற காலத்தில் தலை நிமிர்ந்து நடந்தான். மடியில் காசில்லா விட்டாலும், நாலு பேருக்கு மத்தியில் கண்ணியம் இருந்தது. தற்போது காசு இருந்தது-கெளரவம் இல்லை. வெளிச்சம் விரோதியைப்போல் அவன் கண் களைக் கூசவைத்தது. இருட்டிலேதான் அவன் ஆட்சி நடத்தவேண்டி யிருக்கிறது. எல்லாம் இந்தப் பேராசை பிடித்த பெண்டாட்டியினால் வந்த வினையல்லவா? 'மன்னாடி, எழுந்திரு. நான் இனிமேல் உன்னைக் கள்ளத் தோணி என்று கூப்பிட வில்லை.??-சிந்தனைத் தீயில் வெந்து சாம்ப லகிக் கொண்டிருந்தவனைத் தட்டியெழுப்பினான் குமார். மன்னாடி நிமிர்ந்து பார்த்தான். "ஆமாம்! அந்தக் கடுதாசியையும் ரூபாவையும் இப்படிக் கொடு. இன்று நான் போய்விட்டு வருகி றேன். ஆனால் இந்த மாதிரி சட்டவிரோதமான குற்றங்கள் செய்வது எனக்குப் பிடிக்காது. திருட்டுத் தொழிலை நான் வெறுக்கிறேன்?? என்றான் குமார். அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மன்னாடி சற்று ஆத்திரமாகவே கேட்டான்: சட்டவிரோதமான காரியம் உனக்குப் பிடிக்காதா? திருட்டுத் தொழில் செய்யறதை நீ வெறுக்கிறியா???

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/85&oldid=791368" இலிருந்து மீள்விக்கப்பட்டது