பக்கம்:காப்டன் குமார்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 ஆமாம்...ஆமாம்!” 'அப்படியானா பர்மாவிலேருந்து உன்னை விரட்டினப்போ நீ கப்பலிலேருந்து சட்டத்துக்கு உட்பட்டுத்தான் குதிச்சியா? கப்பலிலே இருந்த லைஃப்பெல்ட்டை எடுத்துத் தோளிலே மாட்டிக்கிட்டு எல்லார்கிட்டேயும் சொல்லிக்கிட்டுத்தான் தங்கை யைத் தேடி வந்திருக்கிறியா?? குமார் அப்படியே பிரமித்துப்போய் நின்று விட்டான். ஏன் பேசாமல் நிற்கிறே? உளவு தெரிஞ்ச ஒரு போலீஸ்காரன் கையிலே சிக்கினா உன் கதி என்ன? சோறு தண்ணி இல்லாமெ பர்மாக்காரன் வருஷக் கணக்காக உன்னை உள்ளே தள்ளிடுவான்...??மன்னாடி ஒரேயடியாக அளந்துவிட்டான். குமாருக்கு அப்படியே கிலிபிடித்துப் போய் விட்டது. மன்னாடியின் காலில் விழுந்தான். தவறு செய்யாத மனிதனே உலகத்தில் இல்லை என்பது எவ்வளவு உண்மையானது! 'நீ இல்லாமெ என்னாலே என் வியாபாரத்தைக் கவனிச்சுக்கிட முடியும். உன்னை நம்பி நான் இந்தத் தொழில்லே இறங்கல்லே. ஆனா நீ இப்போ என்கிட்டே வந்து சேர்ந்திருக்கிறே. உன்னாலே என் தொழிலைக் கொஞ்சம் தைரியமாச் செய்ய முடியும், அவ்வளவுதான். இதனாலே உனக்கும் ஆதாயம் இருக்குது. உன் தங்கையைப் பத்தியும் நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/86&oldid=791370" இலிருந்து மீள்விக்கப்பட்டது