பக்கம்:காப்டன் குமார்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 நிஜாருக்குள் வயிற்றின்மேலே வைத்துக் கட்டிக் கொண்டு குமார் புறப்பட்டான். முதல் இரண்டு நாட் களுக்கு மன்னாடி பின்னாலேயே வந்து; ஊருக்குள் போகும் குறுக்கு வழிகளையும், இரகசிய மார்க்கங் களையும் காட்டிவிட்டு வந்தான். தன்னுடைய ஏஜெண்டுக்கும் குமாரை அறிமுகம் செய்து வைத் தான். ஆம்! இம்மாதிரி வியாபாரங்களுக் கெல்லாம் சிறுவர்கள் தான் ஏற்றவர்கள். அவர்களை எளிதில் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள்’’ என்றார் ஏஜெண்ட். குமாரும் பொறுப்போடு நடந்துக் கொண் டான். வியாபாரம் செழித்தது. மன்னாடி மகிழ்ந்து போனான். திடீரென்று ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாகக் குமார் திரும்பி வருவதற்கு நேரம் அதிகமாகி விட்டது. மன்னாடியின் மனம் மிகவும் கவலை கொள்ள ஆரம்பித்தது. நகரத்துக்குள் சென்ற குமாரின் மனமும் அன்று நிலை கொள்ளாமல் தான் தவித்துக் கொண் டிருந்தது. அவன் வந்த காரியமென்ன? நடந்து கொண்டிருப்பதென்ன? இப்படிக் கள்ளக் கடத்தல் காரனுக்குக் கையாளாக இருக்கவா அவன் கப்பலி லிருந்து குதித்தான்? தங்கை சாந்தி என்ன ஆனாளோ என்று கவலைப்படாத நீயும் ஒரு சகோதரனா? என்று அவனது உள்மனம் அவனைக் குத்திக் கேட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/88&oldid=791374" இலிருந்து மீள்விக்கப்பட்டது