பக்கம்:காப்டன் குமார்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மட்டுமா போயிற்று?..சொத்துப் போயிற்று; அவனு 8 டைய அருமைச் சகோதரியே போய்விட்டாள். அவளைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று அவன் துடித்த துடிப்பென்ன? கடலில் கூட அல்லவா குதித் தான்? ஆனால் கண்ட பலன்? கள்ள வியாபாரம் படிந்தது. கண்ணான தங்கை? அவள் எங்கேயோ! - *. - ஏஜெண்ட் வருகிறாரா என்று குமார் எட்டிப் பார்த்தான். அன்று, சுவானும் அவனும், மாறி மாறிப் போட்டோ பிடித்துக் கொண்ட இடம் அவன் கண்ணில் பட்டது. அந்த நினைவு அவன் மனத்தை காமிராவைச் சு வானிடமாவது அப்போதே அவன் கொடுத்திருக்கலாம். அவனுக்குத் தன்னு டைய படமும், தனக்கு அவனுடைய படமும் என்றா வது ஒருநாள் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். பிெக்னரிக் சென்ற இடத்தில் எடுத்த அபூர்வமான இயற்கைக் காட்சிகள், கூடவந்த நண்பர்கள் எல்லாம் இப்போது கூண்டோடு கைலாசம் போய்விட்டார்கள். காமிரா மட்டுமா? வீட்டிலிருந்து வெளியேறும்போது குடும்பத்தோடு உள்ள அந்தப் பழைய படத்தைத் தவிர ஒரு துரும்புகூட எடுத்துக்கொள்ள முடிய வில்லையே!...இதற்குள் ஏஜெண்டும் வந்துவிடவே, குமார் அவரைப் பின்தொடர்ந்தான். அவனும்கூட வராமற் போனதற்கு அவர் வருத்தப்பட்டுக் கொண் டார். அங்கு கிடைத்த சிற்றுண்டியையும் சைனா டீன யயும் பற்றி வானளாவப் புகழ்ந்தார். குமாருக்கு அவையெல்லாம் பழையவை. f

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/95&oldid=791384" இலிருந்து மீள்விக்கப்பட்டது