பக்கம்:காப்டன் குமார்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 'தம்பீ! ஏன் வெளியில் நின்றுவிட்டாய்? வா உள்ளே போகலாம். அவரை உனக்கு அறிமுகம் செய்துவைக்கிறேன். இந்த ஊரிலே அவர் ஒரு பெரிய...?? என்ற ஏஜெண்டின் வார்த்தைகள் குமா ரைச் சுயஉணர்வுக்குக் கொண்டுவந்தன. 'இருக்கட்டும்...பரவாயில்லை. நான் தெரு விலே நிற்கிறேன். நீங்கள் பேரத்தைச் சீக்கிரமாக முடித்துக் கொண்டு வந்து சேருங்கள்: என்று ஏஜெண்டை அனுப்பி விட்டான். குமார் வாசலிலே சற்றுத் தள்ளி ஒதுப்புறமான ஒர் இடத்தில் நின்று கொண்டிருந்தான். நேரம் அப் போது பதினொரு மணி இருக்கும். குமாரின் இதயத் தில் மீண்டும் இயல்பான பழைய நினைவுகள் தலை தூக்கின. இந்நேரம் சுவான் நிச்சயமாக வீட்டில் இருக்க மாட்டான். பள்ளிக்கூடம் சென்றி ருப்பான். தகப்பன் எப்படிப் பிழைத்தால் என்ன? பள்ளியில் தான் சுவானுக்கு எத்தனை மதிப்பு? தினம் ஒரு சட்டை போட்டுக் கொண்டு டீக்காக வருவான். படிப்பிலும் நல்ல சூட்டிகை. விரைவில் படித்து முன்னுக்குவந்து பெரிய ஆபீசராகக்கூட ஆகிவிடுவான். ஆனால் தன்னுடைய படிப்பு? இதை எண்ணிப் பார்த்ததும் குமாரின் கண் களில் கண்ணிர் பெருகிவிட்டது. "தந்தையுடன் கல்வி போம்-என்று எப்போதோ ஒரு புத்தகத்தில் படித்தது அவன் நினைவுக்கு வந்தது. ஆனால், இன்று தந்தையின் மரணத்துக்குப் பிறகு கல்வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/94&oldid=791383" இலிருந்து மீள்விக்கப்பட்டது