பக்கம்:காப்டன் குமார்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பட்டுக்கொண்டிருப்பான்? இதை எண்ணியதும் குமாரின் நடையிலே வேகம் பிறந்தது. எப்படியும் திருமுருகுவின் வீட்டிற்கு நாளைபோய்விட வேண் டும். இல்லாவிட்டால் இந்த மன்னாடி சாந்தியைப் பற்றி ஒரு தகவலும் விசாரித்து வந்து சொல்லப்போவ தில்லை’ என்று எண்ணிக்கொண்டான். அகலமும், குறுகலும், நீளமும், குட்டையும், சத்தும் பொந்துமான தெருக்களையெல்லாம் கடந்து சென்றுகொண்டிருந்த குமார் ஒரு திருப்பத்திலே அப்படியே திடுக்கிட்டு நின்றுவிட்டான். தூரத்திலே ஒரு போலீஸ்காரன் வருவதை அவன் கண்டுவிட் டான். அவனது கைகள் இயற்கையாகவே உடை களைச் சரிசெய்து கொண்டன. நெஞ்சு, பிடிபட்ட பட்டுப் பூச்சிபோல் படபடத்துக் கொண்டிருந்தது. ஆனால் அந்த ஜவான் வேறு எங்கும் திரும்பவே யில்லை. நேராகக் குமாரையே நோக்கி வந்து கொண்டிருந்தான். அப்போதுதான் எதிர்பாராத ஒன்று நடந்தது. வேகமாக வந்து கொண்டிருந்த குமார் கால் இடறித் தடாலென்று கீழே விழுந்தான். அதே சமயத்தில் அங்கே வந்த போலீஸ்காரன் அவனைத் தூக்கி நிறுத்தினான். குமாரின் நெற்றியிலும் முழங்காலிலும் நல்ல சிராய்ப்பு. 'இப்படியா கண்ணை மூடிக்கொண்டு தெருவில் நடப்பது?’ என்று கடிந்துகொண்ட ஜவான் குமாரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/97&oldid=791386" இலிருந்து மீள்விக்கப்பட்டது