பக்கம்:காப்டன் குமார்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 நெற்றியைத் தடவி விட்டான். சட்டையிலும், நிஜா ரிலும் படிந்திருந்த மண்ணைத் தட்டிவிட்டான். இந்தக் காட்சியை எல்லாம் தூரத்திலிருந்து, மறைவாகப் பார்த்துக் கொண்டிருந்த இரு கண்கள், அடுத்த கணம் என்ன நேரப்போகிறதோ?’ என்கிற பீதியைக் கக்கிய வண்ணம் இருந்தன. அந்த இரண்டு கண்களும் வேறு யாருடையவுமல்ல; மன்னாடியின் கண்களேதான். குமார் குறிப்பிட்ட நேரத்தில் திரும் பாதிருக்கவே சந்தேகமும் பயமும் அடைந்து, தேடிக் கொண்டு புறப்பட்டுவிட்டான். ஆனால் வழியில் இப்படிக் குமார் தன் கண் எதிரிலேயே போலீஸ் காரனிடம் மாட்டிக்கொண்டு நிற்பான் என்று கனவு கூடக் காணவில்லையே! எனவே! அந்த இடத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/98&oldid=791387" இலிருந்து மீள்விக்கப்பட்டது