பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

[இறைவனுக்கு நான் அடிமை ஆனேன்; ஆன அப்பொழுதே யாராலும் மகவாகப் பெறுதற்கு அரியேன் ஆகிப் பிறவித் துயரைக் கடந்துவிட்டேன்; அஃது அல்லவா புனிதமான புனலையுடைய கங்கையைத் திருமுடியிலே தாங்கியவனும் ஒப்பற்ற பொன்மலையாகிய மேருவைப் போன்ற தோற்ற முடையவனும் அனலை உள்ளங்கையிலே தாங்கினவனுமாகிய ஆண்டவன் அருள் இருக்கும் வண்ணம்?]

[ஆள் - அடிமை; இருபாலுக்கும் பொதுவான சொல்; "ஆங்கப் பொழுதி லென்றான் பின்புறத்திலே, ஆள்வந்து நின்றெனதுகண் புதைக்கவே” என்று கண்ணம்மாவைப் பாரதியார் ஆள் என்று சொல்வது காண்க. அவனுக்கு: செய்யுளாதலின் சுட்டு முன்வந்தது. பெறற்கு-குழந்தையாக ஈனுவதற்கு, அரியன்: அருமை, இன்மையைச் சுட்டியது. அரியன் என்பது படர்க்கை ஆண்பால் ஒருமை அன்று, பாடுகிறவர் அம்மையாராதலின். அன் ஈறு தன்மைக்கும் வரும்; இங்கே இது தன்மைக் குறிப்பு வினையாலணையும் பெயர். அஃது என்றது பிறவாமையைப் பெற்ற அது என்றவாறு. நான் அடிமையான செயல் பிறவி ஒழிதற்குக் காரணம் அன்று; அடிமையான என்னை, துன்பத்தினின்றும் நீக்க வேண்டும் என்று இறைவன் திருவுள்ளத்திற் கொண்ட அருளே காரணம் என்றபடி, காலில் விழுந்தானை உதைத்துத் தள்ளுவாரும் உளராதலின், இறைவன் அத்தன்மையன் அல்லன் என அவன் அருள் தகைமையை வியந்தார்.

[ஆம் ஆறு-ஆகும் வண்ணம், அருள் ஆம் ஆறு-அருள் செயற்படும் விதம். தூய பொருள்களைத் தலையாலும் கையாலும் தாங்கும் அவன், தூயனல்லாத என்னையும் ஏன்று நலம் செய்தான் என்றதனால் அவன் அருளின் பெருமை புலப் பட்டது.

"பொன்னார் மேனியனே", "பொன் வண்ண மெவ் வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்" என்று