பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

வரும் அருளாளர் திருவாக்குகளுக்கு ஒப்ப, “ஓர் பொன் பொன் வரையே போல்வான்’ என்றார்,

[அனற்கு அங்கை ஏற்றான்-அனலை அங்கையில் தாங்கினவன். அனற்கு: உருபு மயக்கம். அகம் கை என்பன அங்கை என இணைந்தன; உள்ளங்கையைக் குறிப்பது. "அஃதன்றே அருள் ஆமாறு! என்று கூட்டிப் பொருள் உரைக்க.

மற்றோர் பற்றின்றி இறைவனைப் பற்றி ஆளாகும் அடியவர்கள் பிறப்பை அறுப்பார்கள் என்பது கருத்து.

அற்புதத் திருவந்தாதியில் 8-ஆம் பாட்டு இது.