பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

[பிறருக்கெல்லாம் சிறந்த பதவிகளைக் கொடுத்துப் பலவகை உலகங்களை ஆன்விப்பது இறைவன் அருளே; அந்த அருளே பிறப்பை அறுத்து முத்தி தருவது; ஆனால் நானோ அவன் அருளாலே உண்மையான பொருளைக் காணும் நியமத்தை உடையவள். ஆதலால் அவன் அருளே, எனக்கு எல்லாக் காலத்தும் எல்லாப் பொருளும் ஆவது.]

மற்றையோர் அருளைத் தெரியும் முறை வேறு; அம்மையார் தெளிந்தது வேறு.

[ஆள்விப்பது-ஆளச் செய்வது. ஈசன் என்பதை முன்னும் கூட்டி ஈசன் அருளே ஆள்விப்பது என்று கொள்க. எனக்கு ஆவது அருளே என்று ஒரு சொல் வருவித்துக்கூட்டி முடிக்க.]

எல்லாம் இறைவன் என்று காணுவாருக்கு எல்லாம் அருளினால் விளையும் விளைவு எல்லாம் இன்பந்தருவான என்ற நிலை உண்டாகும். “இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை” என்ற நிலை அது.

இந்தப் பாடல் அற்புதத் திருவந்தாதியில் ஒன்பதாவது பாட்டு.