பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

சில சமயங்களில் இனிமையாக இருக்கும் பொருள் வேறு சமயங்களில் சுவையை இழந்துவிடும். சிறுபிள்ளைப் பிராயத்தில் மண்ணில் விளையாடுகிறோம்; பிறகு அந்த விளையாட்டைச் சுவைப்பதில்லை. இறைவனே என்றுமே மாறாமல் இனிமையை அருள்பவன்; மனத்துக்கு இனியவன்; அந்த இனிமை என்றும் மாறாமல் இருப்பது ஆதலின், “என்றும் மனக்கு இனிய வைப்பாக வைத்தேன்" என்றார்.

"அருளே உலகெலாம் ஆள்விப்பது."

யார் யாரையோ வள்ளலாகவும் உபகாரியாகவும் தலைவனாகவும் கொண்டு வாழும் நமக்கு நிரந்தரமான இன்பம் கிடைப்பதில்லை. என்றும் அழியாத ஒருவனைத் தலைவனாகக் கொண்டால் அவனால் வரும்இன்பம் என்றும் நிலைத்திருக்கும். ஆகவே ஈசனையே தம்முடைய உபகாரியாக, தலைவனாகக் கொண்டார் அம்மையார்.

"—எனக்கு அவனைக் கொண்டேன்

பிரானாக,”

"பெரிய செல்வன் ஒருவனைத் தம் வீட்டில் கொண்டுவந்து வைத்துக்கொள்கிரறோம். அவனுடைய செல்வமெல்லாம் நம் வீட்டின் அறையில், நாம் எப்பொது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இருக்கிறது. அந்த நிலையில் நமக்குக் குறைவு ஏது? எதற்கு வேண்டுமானாலும் அந்தப் பொருளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வள்ளலை உறவு கொண்டு விட்டோம். இவரை நம் வீட்டிலே வைத்திருக்கிறோம். இவரால் நமக்கு எத்தனை இன்பங்கள்! வீடு, வாசல், உடை, உணவு எல்லாம் இவரால் கிடைக்கின்றன." இனி நமக்குக் குறை ஏது? என்று பெருமைப்படலாம்.

இறைவனாகிய வைப்பை உள்ளத்திலே வைத்துப் பூட்டிக் கொண்ட அம்மையார், அவரையே பிரானாகக் கொண்ட் அன்ன, அப்படிக் கொண்ட அந்தக் கணத்திலே தம்முடைய துன்பமெல்லாம் கால் வாங்கி ஓடக் கண்டார். என்றும்,