பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78


[ஒன்றையே எப்போதும் நினைந்து வாழ்ந்தேன், அந்த ஒன்றையே துணிவாக உறுதி செய்து பிறவற்றினின்றும் நீங்கினேன்; அந்த ஒன்றையே என் அந்தரங்கத்தினுள்ளே பொன்னைப் போலப் பொதிந்து இன்புற்றேன்; அந்த ஒன்று, கங்கையைத் தரித்தவனும், சந்திரனையணிந்த ஒளிவீசும் சடாமுடியை உடையவனும், கொழுந்துவிடும் ஒளியை யுடைய கனலையுடைய உள்ளங்கையைப் பெற்றவனுமாகிய சிவபெருமானுக்கு ஆளாகும் அந்த இன்பம்.]

ஒன்றே: ஏகாரம், பிரிநிலை, ஒன்றேகாண்: காண், அசை, ஒன்றே அது என்று முடிக்க. ஒளி யென்றது ஆகுபெயராய்க் கனலைக் குறித்தது.

இன்னதுதான் வாழ்க்கையின் லட்சியம் என்று கொண்டு அதனையடையப் பலகாலும் நினைந்து, மற்றவற்றில் நெஞ்சம் ஈடுபடாமல் உறுதியாக நின்று, அதில் உள்ளத்தை ஒன்றுபடுத்தி அமைதிபெறும் இன்பநிலையை இந்தப் பாட்டில் கூறினார் அம்மையார்.

இது அற்புதத்திருவந்தாதியில் பதினோராம் பாடல்.