பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80


கவனித்துக்கொண்டே இருக்கிறான். நாம் அவனை அணுகவில்லை என்பதற்காக அவன் நம்மைப் புறக்கணிப்பதில்லை. அவனுடைய அருளைப் பெறவேண்டும் என்று நாம் எண்ணாமல் இருந்தாலும், தன்னுடைய அருளை வழங்க வேண்டும் என்று அவன் காத்திருக்கிறான்.

கம்பர் இந்த நிலையை விராதன் துதியில் இணைத்துச் சொல்கிறார்.

தாய் தன்னை அறியாத கன்றில்லை; அக்கன்றை
ஆயு மறியும் உலகின்தாய் ஆயின்ஐய,
நீஅறிதி எவ்வுயிரும்; அவை உன்னை நிலையறியா;
மாயம்இது என்கொலோ? வாராதே வரவல்லாய்!”

புன்செய்க் காட்டில் ஒரு பெரிய வீடுகட்டினான் ஒருவன். அதில் இருந்த கிணற்றை அப்படியே வைத்துக்கொண்டான். அவ்ன் உடற்பயிற்சி செய்து உடம்பை வலிவுள்ளதாக வைத்திருப்பவன். ஒரு நாள் அவன் மனைவி அந்தக் கிணற்றில் தண்ணிர் எடுத்தாள். தாம்புக் கயிற்றில் குடத்தைக் கட்டித் தண்ணிர் இழுத்தாள். கயிறு அறுந்து குடம் கிணற்றுக்குள் விழுந்து விட்டது.

அந்தப் பெண்மணி தன் கணவனிடம், “யாரேனும் ஆள் இருந்தால் பாருங்கள், கிணற்றில் விழுந்த குடத்தை எடுக்க வேண்டும்” என்றாள்.

"ஆள் எதற்கு? நான் எடுக்க மாட்டேனா?’ என்று சொல்லி அவன் கிணற்றில் குதித்தான். அகலமான கிணறாதலின் குதித்த இடத்தில் குடம் கிடைக்கவில்லை. மேலே வந்து மூக்சு விட்டு, மறுபடியும் ஓரிடத்தில் முழுகினான். அப்போதும் கிடைக்கவில்லை. மறுபடியும் வேறிடத்தில் முழுகினான்; கிடைக்கவில்லை. இப்படி எட்டு முறை மூழ்கியும் குடம் கிடைக்கவில்லை. கடைசியில் ஒன்பதாவது முறை