பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

அளித்துள்ளமக்கள்,ஜெர்மனிய பாஸிஸ்டு முதலாளிகளால் நாட்டை விட்டு வெளியே துரத்தப்படுகிருர்கள். அதே சமயத்தில் பிரிட்டனில் உள்ள பாசிஸ்டுகளும் (அங்காட் டின் ஆட்சி கிர்வாகத்தில் பொறுப்பான பங்கு ஏற்றுக் கொண்ட யூதர்களின் எண்ணிக்கையும், நாட்டின் உயர் குலத்தார் வரிசையில் இடம் பெற்று விட்டவர்களின் தொகையும் குறைவானது அல்ல.) யூதர்களே எதிர்க்கும் வெட்கக்கேடான கோட்பாட்டை உபதேசிக்கத் தொடங்கி யிருக்கிருர்கள்.

ஆளுல், தொழிலாளி வர்க்கத்தினரிடம் அதிகாரம் இருக்கிற நாட்டிலோ, தனியாக யூதர்களின் குடியரசு ஒன்று - யூத சுயாட்சி மாகாணம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது.

பல நாடுகளிலும் உள்ள முதலாளிகள் மற்றுமொரு உலக யுத்தத்திற்காக ஜன்னி வேகத்தில் ஆயத்தம் செய்து கொண்டிருக்கிரு.ர்கள். தொழிலாளிகள் விவசாயிகள் ஆகியோரது உழைப்பை இன்னும் அதிகமாகவும் சுரண்டி சுய லாபம் பெறுவதற்குத் துணையாக உலகத்தை மறுபடி யும் பங்கு போட வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, பெரிய நாடுகளின் இரும்புப் பிடியில் சிக்கிக் கொள்ளக் கூடிய ஆபத்து சிறிய காடு களுக்கு மீண்டும் தோன்றியுள்ளது. தங்கள் கலாசாரத்தை தாராளமாக அபிவிருத்தி செய்யும் உரிமைமை இழந்து விட கோலாம் என்ற பயம் அவற்றுக்கு மீண்டும் ஏற் பட்டிருக்கிறது.

ஏகாதிபத்தியமும், பாசிசமும் பல்வேறு மொழிகளையும் இனங்களேயும் சேர்ந்த பாட்டாளி மக்களிடையே தேசீயச் சண்டை, ஜாதி அகங்தை, வெறுப்பு ஆகியவற்றின் கச்சு விதைகளை விதைத்து வருகின்றன. நாளடைவில் இவை