பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டாளி வர்க்க மனிதத்துவம் - 103

மாதிரி அடி எடுத்து வைத்து அதை மண்ணுேடு மண்ணுக கசுக்குவதற்குரிய காலம் வங்து கொண்டிருக்கிறது. இது தவிர்க்க முடியாதது ஆகும். அற்பமான சிறுபான்மை இனம் எதுவோ சிருஷ்டிக்கும் ஆற்றலே இழந்து தளர்ந்து போய்விட்டது - வாழ்கை பற்றிய தனது பயத்தினுலும், செல்வத்தின் மீது கொண்டுள்ள வளர்ந்து வரும் பேராசை யிலுைம் துராசையிலுைம் அது சீரழிந்து சிதைந்து வருகிறது-என்பதற்காக மனிதவர்க்கம் தனது அழிவைத் தானே பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. இந்தச் சிறுபான்மை இனத்தின் அழிவு தான் மிகவும் உயர்ந்த நியாயமான செயலாகும். இந்தச் செயலை நிறைவேற்றும் படி சரித்திரம் பாட்டாளி வர்க்கத்துக்கு ஆணேயிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மகத்தான செயலுக்குப் பிறகு உலக மக்கள் அனைவரும் புதுவாழ்வு எனும் சிறப்பான சுதந்திரஅமைப்பை உருவாக்க, சர்வதேச ஒற்றுமையோடும் சகோதரத்துவத்துடனும், உழைப்பார்கள்.

இது வெறும் கம்பிக்கை தான? பாட்டாளி வர்க்கத் தைப் பொறுத்த மட்டில், கம்பிக்கையும் அறிவும், பொய்யும் உண்மையும் போல ஒன்றுக்கு ஒன்று நேர்மாருன்வை என்றிருந்த காலம் போய் மறைந்தது. பாட்டாளிவர்க்கம் ஆட்சி புரிகிற இடத்தில், அறிவுக்கும் நம்பிக்கைக்கு மிடையே பேதம் விளைவதற்கு இடமே கிடையாது. அங்கே தனது சிந்தனையின் வலிமையை உணர்ந்த மனித ஞானத் தின் விளைவே கம்பிக்கை ஆகும். இந்த கம்பிக்கை வீரர்களைச் சிருஷ்டிக்கிறது; கடவுளர்களைப் படைக்கவில்லை - இனி படைக்கப் போவது மில்லை! - (1934)