பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகி பிரான்ஸ் . έ,

அவள் உள்ளே வந்தாள். தளர்ந்த கண் இமைகளின் ஊடாக, ஆண்களே அளவிடுவதில் கிபுணத்துவம் வாய்ந்த பெண்ணின் பார்வையை வீசி, அவள் வேகமாக என்னே ஆராய்ந்தாள்.

ராணி வேடம் தாங்குவதை வெகு காலமாகவே நிறுத்தி விட்ட ஒரு கடிகையின் அபிநயத்தோடு அவள் என் வணக்கத்தைத் தலே அசைத்து ஏற்றுக் கொண்டே கேட்டாள் நீர் பிரஞ்சு பேசுவது உண்டா?” என்று.

"இல்லே, அம்மணி. நான் உண்மையை மட்டுமே பேசுவேன்' என்று நான் பதிலளித்தேன்.

"அது யாருக்கு வேண்டும்?' என்று, தோள்களேக் குலுக்கியவாறே சொன்னுள் அவள். "அதை யார் கவனித் துக் கேட்கிருர்கள்? உண்மையை யாருமே விரும்புவதில்லை -அழகான கவிதை வடிவில் இருந்தாலும் சரிதான்.”

அவள் ஜன்னல் அருகே போய், திரைகளுக்கு ஊடே எட்டிப் பார்த்தாள். உடனடியாகவே விலகி வந்தாள்.

'ஆகவே, வெளியே வீதிகளில் இன்னும் அவர்கள் அதில் தான் முனேங்திருக்கிருர்களா? என்ன குழந்தைகள் அவர்கள் அவர்களுக்கு என்னதான் வேண்டுமோ? அதை என்னல் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவர்களுக் கென்று ஒரு குடியரசு கிடைத்திருக்கிறது. நீங்கள் வேறு எங்குமே காணமுடியாத விதத்தில் மந்திரி சபை ஒன்றும் ஏற்பட்டிருக்கிறது. மந்திரிகளில் ஒருவர் சோஷலிஸ்டாகக் கூட இருந்தார்-ஒரு காட்டின் மக்களே மகிழ்விக்க இது போதாதா என்ன?”

அவள் மனம் போன போக்கில் தலையை ஆட்டிக் கொண்டாள். "என்ன அப்படித்தானே? அது போகட்டும் நீர் என்ைேடு பேச வந்திருக்கிறீர். இல்லையா?” என்ருள்.