பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாளித்துவ பத்திரிகைகள்

பழைய புத்தகக் கடைகளில் காணப்படுகிற கழிவுக் காகிதங்கள் எல்லாம். இறந்த காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை எடுத்துச் சொல்லும் இன்று மக்கள் எவ்விதம் வாழ்கிரு.ர்கள் என்பதை உணர்வதற்கு செய்தித் தாள்களில் வருகிற விளம்பரங்களும், போலீஸ் செய்திகளும் நன்கு துணைபுரியும். செய்தித்தாள்கள் என்று நான் கூறுகிறபோது, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள கலாசார நகரங்களில் இருக்கின்றனவே, அவற்றி லுள்ள பொது மக்களின் அறிவு அபிவிருத்திக்கான சாதனங்களே'த்தான் குறிப்பிடுகிறேன். தங்கள் எஜமானர் களேப்பற்றி வேலைக்காரர்கள் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லக் கூடிய விஷயங்களைக் கேட்பதைப் போலவே, முதலாளித்துவ பத்திரிகைகளைப் படிப்பதும் பயன் அளிக்கும் என்று நான் கருதுகிறேன். ஆரோக்கியமாக இருக்கின்ற ஒருவனுக்கு வியாதிகள் சுவாரஸ்யமான விஷயங்களாகத் தோன்ற முடியாது. தோன்றவும் கூடாதுதான். ஆனல் அவற்றைப் பற்றிக் கற்றறிய வேண்டியது டாக்டரின் கடமையாகும். வைத்திய னுக்கும் பத்திரிகையாளனுக்கும் பெர்துவான அம்சங்கள்