பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாளித்துவ பத்திரிகைகள் 117

"பெர்லின் நகருக்கு அருகாமையில் வசிக்கும் போதகர் ஒருவரைக் காண அர்த்த ராத்திரிப் பிசாசு ஒன்று வழக் கமாக வந்து போகிறது. அதனுடைய அசுத்தமான ஸ்பரிசத்தினுல் அந்தப் போதகர் மூன்று தடவை விழித்தெழ சேர்ந்தது. ஆகவே, அவர் போலீசாரின் உத வியை நாடினர். அவர்கள் வந்து பரிசோதித்த போது, அவர் வீட்டு ஜன்னலின் கீழ் ஒரு தொப்பியைக் கண்டு எடுத்தார்கள். அது அந்தப் பிசாசு தவற விட்ட தொப்பி யாகத்தான் இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.”

'கத்திரித்து விடப்பட்ட கூந்தலை உடைய பெண்களே மாதா கோயிலின் பிரார்த்தனேக் கூட்டத்துக்கு அனுமதிக் கலாமா? அநேக அத்தியட்ச குருமார் ( பிஷப் ) இந்தப் பிரச்னையைக் கிளப்பியதல்ை மே மாதம் 84-h தேதியன்று புனித போப்பாண்டவர் இவ் விஷயம்பற்றி ஆலோசனை நடத்தினர். திருச் சபையினர் சாதகமான அபிப்பிராயமே அறிவித்துள்ளனர். டெண்கள் தங்கள் தலைமயிரைக் குட்டையாக வெட்டிக் கொள்வது தருமத் துக்கு விரோதமானது அல்ல என்றே அவர்கள் கருது கிருர்கள்.” *

"ஆண்டு தோறும் பிரான்ஸ் தேசத்தில் சுமார் நாலாயிரம் பெண்கள் காணுமல் போய் விடுகிருர்கள்' என்று சென்ற வருடம் ஒரு பத்திரிகை கிருபர் குறிப்பிட் டிருந்தார். பிரெஞ்சு நகரங்களில் பெண்களே விபசாரத்தில் ஈடுபடுத்துகிறவர்கள் பலர் சமீபத்தில் கைது செய்யப் பட்டனர். இந்தக் குழுவினர் தென் அமெரிக்கக் குடியரசு களில் உள்ள விபசார விடுதிகளுக்கு 3,500 பெண்களே விற்பனை செய்திருக்கிருர்களாம். இவ்வாறு பெண்களே வாணிபப் பொருளாக மாற்றி விற்பனை செய்யும் கோஷ்டி கள் போலந்து நாட்டிலும் வெற்றிகரமாகத் தொழில்