பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

புரிவதாகத் தெரிய வந்தது. அடிமை வியாபாரத்தின் இந்தத் துறை பற்றி ஏ. லோங்த்ரே எனும் பிரஞ்சுப் பத்திரிகையாளர் ஒருவர் விரிவான ஆராய்ச்சி செய்திருக் கிரு.ர். கிரிமினல் ட்ரேட் (கயமை வாணிபம்) என்ற பெயரில் அவர் எழுதியுள்ள புத்தகத்தை நம் காட்டில் "தி பெடரேஷன் பப்ளிஷிங் ஹவுஸ்' எனும் ஸ்தாபனம் பிரசுரம் செய்திருக்கிறது. அது மிகவும் சுவாரஸ்யமான புத்தகம் ஆகும். பெண்களே எவ்வாறு வசப்படுத்தி, கள்ளத் தனமாகக் கடத்திச் செல்கிருர்கள்; அர்ஜண்டைனுவில் உள்ள விபசார விடுதிகளில் பெண்கள் வேலே செய்யும் விதம் முதலியன பற்றி இந்தப் புத்தகம் விரிவாக எடுத்துச் சொல்கிறது. ஆனால் அகியாயத்தைத் கண்டு சீறும் ஆவே சம் ஒரு சிறிது கூட இப் புத்தகத்தில் காணப்படவில்லை; இது தான் சிந்தனையைத் துரண்டும் முக்கிய விஷயமாகும். விபசாரத்துக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் ஒரு ஆசாமியைச் சங்தித்தது பற்றி, 10-ம் பக்கத்தில் லோங்த்ரே இவ்வாறு எழுதுகிருர், * . .

"ஆர்மண்ட் ஒரு தரகன் தான் ...... அவன் தொழில் என்ன என்பதை கான் அறிவேன். கான் யார் என்பது அவனுக்கும் தெரியும். அவன் என்னே கம்புகிருன். நானும் அவனே கம்புகிறேன்-பரஸ்பரம் வியாபாரிகளைப் போல.”

அது தான் உண்மை - வியாபாரிகளேப் போல.” ஆம், அது வியாபாரத்தைத் தவிர வேறெதுவும் இல்லே. மனச் சாட்சியின் பிரகாரம் அந்த வியாபாரம் மனிதத் தன்மை குன்றியதாகவும் மிகவும் இழிவானதாகவும் இகுப்பினும் பாதகமில்லே இவர்களுக்கு. -

ஆயினும், லோங்த்ரேயின் மனப்பண்பைத் தெளிவு படுத்துவதற்கு, அமெரிக்கப் பத்திரிகையாளர் ஒருவரின் வார்த்தைகளே அப்படியே மேற்கோளாகக் காட்டுவது தான் பொருத்தமாக இருக்கும்: