பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

நான் மெளனமாக அவளேக் கவனித்தேன். அக்த: ஆத்மாவின் பரிதாபகரமான மரண அவஸ்தையைக் கண்டதும், என் தொண்டையில் வெடித்து எழுந்த வேதனே ஒலியை, நான் சிரமத்தோடுதான் அடக்கிக் கொண்டிருந்தேன்.

"இது பிரான்ஸ்ாக இருக்க முடியுமா? பளிச்சிடும் சிங்தனைகள், சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் எனும் சுடர் விட்டு ஒளிரும் எண்ணங்களே எப்பொழுதும் என் உள்ளத்தில் சித்திரித்துக் காட்டிய உலக நாயகி இவளாக இருக்க முடியுமா?” என்று என்னே நானே கேட்டுக் கொண்டேன்.

"நீர் சந்தோஷமான துணைவன் அல்ல’ என்று சொல்லிவிட்டு அவள் சோர்வுப் புன்னகை புரிந்தாள்.

"அம்மணி, உண்மையான ரஷ்யன் எவனும் இன்று பிரான்ஸின் விருந்தாளியாகிற பொழுது சந்தோஷம் அடைவதில்லை' என்று நான் பதிலளித்தேன்.

"ஏன் அப்படி?’ என்று அவள் மெல்லிய புன்முறு வலோடு, ஆச்சரியத்தால் இமைகளே உயர்த்திக்கொண்டே, விசாரித்தாள். 'எனது பாரிஸில் ஒவ்வொருவரும் உல்லாச மாக இருக்கிரு.ர்கள். ஆம்; ஒவ்வொருவரும், எப்பொழு

"、烈# 刹

தும்' என்ருள்.

"தெருக்களில் இப்பொழுது தான் நான் அதைப் பார்த்தேன்... எனது காடாகிய ரஷ்யாவிலும் இதே ரக கான உல்லாசத்தை நீ பார்க்கலாம். உனது கண்பரான ரஷ்ய இார் அரசனுக்குப் பிடித்தமான விளையாட்டு, போர் வீரர்களுக்கும் மக்களுக்குமிடையே ஏற்படுகிற, ஆட்கொல்வி விளையாட்டுத்தான்...'

"என்ன உற்சாகமற்ற ஆளாக இருக்கிறீர்!’ என்று அவள் முகத்தைச் சுளித்தபடி பேசிள்ை. "மன்னன்