பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டாளி வர்க்க மனிதத்துவம் 8?

என்று கிரூபித்துப் பாதுகாப்பதையே தங்கள் பிழைப் பாகக் கொண்டு விட்டவர்கள் முன்னே விட அதிகமான சப்தமிட்டு இதைக் கூவுகிருர்கள். - - -

முதலாளித்துவத்தின் நோய்', பலவீனமுற்றிருந்த நிலப் பிரபுக்களிடமிருந்து முதலாளிகள் அதிகாரத்தைப் பலவந்தமாகப் பறித்துக் கொண்ட உடனேயே ஆரம்ப மாகி விட்டது. இந்த வியாதியை முதன் முதலாகக் கவனித்து, அதைப்பற்றி கிராசையோடு மூர்க்கமாகக் குரல் எழுப்பியவர் கார்ல் மார்க்ஸ் காலத்தில் வாழ்ந்த, பிரீட்ரிக் நீட்ஷேதான் என்று கொள்ளலாம். தற்செயலானது. என்று எதுவுமே கிடையாது. வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காரணம் உண்டு. முதலாளித்துவத்தின் வீழ்ச்சியும் தொழிலாளரின் ஆட்சியும் தவிர்க்க முடியாவை என்பதை விஞ்ஞான பூர்வமாகவும் மறுத்துரைக்க முடியாத வகையிலும் மார்க்ஸ் மெய்ப்பித்துக் கொண். டிருந்த காலத்திலேயே, சுங்தரமான மிருகத்தின் கட்டுப் பாடற்ற ஆட்சியின் தர்ம கியாயம் பற்றி, பயம் கொண்டு விட்ட-உன்மத்தனின் கோபாவேசத்தோடு நீட்ஷே உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தார். நீட்ஷேக்கு முன்பு, முதலாளிகளின் அரசாங்கம், மதம், கன்னெறிகள் பற்றி எல்லாம் மாக்ஸ் ஸ்டர்னர் என்பவர் எதிர்வாதம் செய்து கொண்டிருந்தார். தனி மனிதனின் வரைமுறையற்ற அகங் கார உரிமையை அவர் வற்புறுத்தி வங்தார். அராஜக மான இந்தக் குற்றச் சாட்டு சாராம்சத்தில் மனிதத்து வத்தை வெளிப்படையாகக் கண்டிப்பதே ஆகும். அதை முதலாளித்துவம், மத்திய காலத்திலேயே-நிலப் பிரபுத்துவத்தையும் கிலப் பிரபுக்களின் லட்சியக் கோட்பாட்டுக்குத் தலைமை தாங்கும் (திருச்சபை) மத. பீடத்தையும் எதிர்த்துப் போரிடத் துவங்கிய பொழுதே தோற்றுவித்தது. மனிதத்துவத்தின் அசெளகரியத்தையும்,