கட்டளைக் கலித்துறை 3. பிரசங்க மாறி பொழிபாற் கரன்றவப் பேற்றிலுற்றோன் அரசாங்கம் யாவு மமைந்த பிரான்றமிழ ழாரணங்கை வரசங்க மேற்றி வளர்ப்பவன் றேவை வளநகரான் கரசங்க மாறங்கை! நின்னடி யானவற் காத்தருளே சந்த விருத்தம் 4. சீத மாமதி போலநி லாவிய தேக ராஜசி காமணி தேவையன் சேது ராஜ குலாதிய னேருறும் - ஜெயமாது சேர்பு யாசல வேள்மத வாரணஞ் சேர்ச மூகசே னாபதி மாபதி சேணு லாவரு மாகவி கேதனன் - ஜெகவீரன். போத வேதிய ராசியி னானுயர் பூமி யோர்தவ மாகிய நீதிமன் போது மேவிய மாதருண் மேயவன் புலவோரின் போக வேமிடி யார்நிதி யேதரு போக பூமியி னோர்தரு வானவன் போது சேர்தள வார வரோதயன் - புவியோர்தம் காது மாபெரு பாதகம் வேறுசெய் காசில் சேதுத ராபதி யேசறு காவ லோர்பணி பாதச ரோருகன் - கவிராஜன் காவி கேதன மாதி பதாகையன் காரு லாவரு மால்பொதி யாசலன் கால லாருமை பாகனை யேதொழு - கனயோகன் தீதி லாதபே ராயுள னாகவென் டோளி பாலவி லோசனி தேவிவன் தீய மாமகி டாசுர காதகி - திரிசூலி தேன ளாவிய தாதகி சேர்நறு சீர்சடாடவி தேவ சிகாமணி சில நாயகி தாயகி யேயருள் - புரிவாயே. சந்தக் கலித்துறை 5 அளிகோடி யிசைபாடு தளவார மணிமேரு நிகர்தோளினான் களியிகை பொறைசீல நிறையாதி குனமேவு கலைநாவலோன் தளிர்நேரு பதமாதர் மதன்நீதி நெறியோடு தரையாள்பவன் ஒளிர்தேவை நகராதி பதியாயுள் பலவாக வுலகாளவே s り
--