3. 4. VI }. 2. 5 கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே மொழிகளுள்ளே முன்றோன்றியும் மூவா மொழியரசி! வாழ்த்துதுமே பல்மொழிகள் தமையின்றும் பகரும்இளம் பருவநலம் அல்காத தமிழ்க்கன்னி அன்னை உன்னை வாழ்த்துதுமே. பொங்கல் திருநாள் பாடல்கள உடற்குறுதி தருமிந்த உணவு நாள் விழாவில் அகம் நடற்குரிய கருத்தொன்று நம்மொழியைப் பற்றியதே நம்நாடு நலவுரிமை நயந்தடைந்த தேயெனினும் நம்மொழிதான் இனுமுரிமை நன்குபெற வில்லையந்தோ: அரசுமொழி யாவதற்கு ஆற்றல்தமிழ்க் கில்லையென்பார் பரக்கலைத் தமிழ்மொழியைப் படித்தாய்ந்து பாராரே மூவேந்தர் ஆட்சிசெய்த மொழிதமிழே யல்லாது
- * ~.
நாவேந்து பிறமொழிதான் யாதென்று நவில்வாரே தாய்மொழியைக் கல்லாதார் தாங்கள் ஆங் கிலவடிமை ஆய்முடிபு கூறுவதும் அறநெறியின் பாற்படுமோ பள்ளிகளிற் கலைபயிற்றப் பயன்படுமோ தமிழென்ன எள்ளியுரைப் பாரிவர்கள் இயற்றமிழின் இயல்புணரார் இந்தியெனும் பெருவெள்ளம் இந்நாட்டில் நம்தமிழை உந்தியிட வந்திடுமேல் அதை உந்த முந்துவமே மொழிக்குழுவின் முன்னின்று மூவாத் தமிழ்மொழியை அழிக்கவரும் எம்முடியும் ஒழிக்கவரும் என அறைவீர் புத்தாண்டு பொலிந்திடவும் புலஞ்செழித்து மலிந்திடவும் முத்துநிகர் தமிழ்த்தாயை முறைாயக வணங்குதுமே தமிழ்த்திருநாள் கொண்டாடும் தகைமைமிகு தமிழ்ப்பெரியீர்! அமிழ்துதரும் தமிழ்த்தாயின் அடிபோற்றல் கடனாமே தமிழ்த்தாய் போற்றுதும் தமிழ்த்தாய் போற்றுதும் அமிழ்துறழ் அறிவாம் பால்சுரந் தளிக்கும் தமிழ்த்தாய் போற்றதும் இன்றே இமிழ்கடல் வரைப்பின் தமிழகத் தீரே