உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கேலிப் பாட்டு

37

யாருமே வராத இடமாக வேண்டுமென்ருல் அத்தை மகன் சொல்கிற யோசனை சரியானதுதான்! அம்மியை மடியில் கட்டிக்கொண்டு ஆழக்கிணற்றில் இறங்கினல் என்ன ஆகும்? நீங்களே யோசனை செய்து கொள்ளுங்கள். ஆனல், அந்தப் பெண்கள் அத்தை மகனுடைய யோசனையைக் கேட்க வில்லை. அவனையே மடக்கி மேலும் பாடுகிருர்கள். அத்தை மகனுக்கு அவர்கள் சளைத்தவர்கள் அல்ல.

கும்மி யடிக்கிற பக்கத்திலே
      கூட்டமென்னடி ஆண் பிள்ளைக்கு?
பல்லுக் காரப் பையன் பல்லைப் பிடுங்கிக்
      குப்புறத் தள்ளடி ஆண் பிள்ளையை
கும்மியடிக்கிற பக்கத்திலே
      கூட்டமென்னடி ஆண் பிள்ளைக்கு
கம்பத்து மூளியின் பல்லைப் பிடுங்கிக்
      குப்புறத்தள்ளடி ஆண் பிள்ளையை