பக்கம்:காலத்தின் குரல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவசு 35 சரியான கணிப்பு என அங்கீகரிக்கிறேன். விமர்சனத்துறையில் ஈடுபட்ட சிலரைக் கூறுங்கள் அத்துறை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? இன்று தமிழில் ஆரோக்கியமான சூழல் உள்ளதா? விமர்சனத்தில் தனிமனிதத் தாக்குதல் அவசியமா? விமர்சனத்துறையில் அதிகமானவர்கள் ஈடுபடவில்லை. சிலர் ஈடுபட்டாலும், தொடர்ந்து விமர்சகராக வளர விடாப்பிடியாக விமர்சனத்தை வளர்த்தவர்கள்: க. நா சுப்பிரமணியம், சி. சு. செல்லப்பா, இலங்கை டாக்டர் கைலாசபதி, டாக்டர் சிவத்தம்பி அவ்வப்போது ஈடுபட்டவர்கள். நகுலன், சுந்தரராம சாமியையும் சேர்த்துக்கொள்ளலாம். தீவிரமாக ஈடுபட்டு, ஆரோக்கியமில்லாத முறையில் விமர்சனத்தை திசை திருப்பியவர்கள்: வெ. சாமி நாதன், தர்முசிலாாமு. விமர்சனம், ஆக்கபூர்வமாக (Constructive) இருக்க வேண்டும். அழிவு விமர்சனமாக(Destructive criticism) இருக்கக்கூடாது. குறைகளை மட்டுமே வலியுறுத்து வதைவிட, நல்லதன்மைகளையும் நயங்களையும் சுட்டிக் காட்டுவதாகவும் அமையவேண்டும். ஆளேப்பார்த்து எடை போடுவதைவிட, படைப்பின் தன்மைகளை ஆராய்வதே நல்லது.