பக்கம்:காலத்தின் குரல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவசு: 45 கூட அவன் தன் மனதில் அனுபவங்களாக அனுப வித்தே எழுதுகிருன். ஒரு பெண்ணின் பிரசவ நேச வேதனைகளையும் துடிப்புகளையும் பெண்ணவிட ஆண் படைப்பாளியே திறமையாக இலக்கியமாக்கியிருக் கிருன் என்று உதாரணமாகச் சொல்லப்படுவது உண்டு ‘முழுக்க முழுக்கக் கற்பனை’ என்பது சாத்தியமே இல்லை. கற்பனைப் படைப்பு கூட வாழ்க்கை உண்மையின் ஒரு சிறு அம்சத்தையாவது அடிப்படையாகக் கொண்டு தான் பெரிய வடிவம் பெற முடியும். எதார்த்தத்தை விட கற்பனையே மிகுதியாக உடைய உயர்ந்த கலைப் படைப்பு நிச்சயமாக வரவேற்பையும் பாராட்டுதலை யும் பெறும் புதுமைப்பித்தனின் காஞ்சனே’, ஆஸ்கார் $ußsbą si “The Picture of Dorian Gray” Berse a-grg னங்களாக அமையும். - நம் முன்னைய இலக்கியங்கள் சிலம்பு, மேகலை நிலைத்த பேறுடையனவாகத் திகழ்வது போலத் தற்காலத்திய படைப்புக்கள் இல்லையே, ஏன்? கவிதை-காவியத்தை பொறுத்தவரை இக்கருத்து சரி யானது. சிலம்பு, கம்பராமாயணம் போன்ற மாபெரும் படைப்புக்களே ஆக்கும் ஆற்றல் இல்லாமலே போய் விட்டது என்றுதான் சொல்ல வேண் டும், உரை நடையில், நாவலில் உலகஇலக்கியக் கொடுமுடி கள் என மதிக்கப்படுகிற டால்ஸ்டாய், டாஸ்ட எவ்ஸ்கி, பால்ஸ்சக் போன்றவர்களின் படைப்புகளுக்குப் பக்கத் திலே நிற்கக் கூடிய மகத்தான படைப்புகள் இதுவரை தமிழில் தோன்றியதில்லை. இந்திய மொழிகளில்