பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 99 பூப்படையுமுன் திருமணம் செய்வதுதான் உகந்தது என்ற வழக்கம் புகுந்தது. இளம்வயதுச் சிறுமியர் பலரை உட்கார்த்தி வைத்து, ஒர் ஆண் தாலி கட்டும் சடங்கு புகுந்தது. பின்னர் சம்பந்தம் செய்யும் கல்யாணமாக, அதாவது வயது வந்த டெண்ணின் மனைவியாக விரும்பியவனுடன் வாழ்வதற்குரிய சம்பந்தம் செய்துகொண்டனர். இந்தச் சம்பந்தத்தில், மரபுச் சடங்குகள் என்று பெண்ணின் ஒவ்வொரு இயக்கத்தையும் பிணிக்கும் வழக்கங்கள் இருந்திருக்கவில்லை. இந்தியா முழுவதுமாக ஆதிகுடிகளின் வழக்கங்களிலுள்ள தாய்வழி முதன்மை, தந்தை வழி முதன்மையாக மாறத் திணிக்கப்பட்ட வழக்கங்களில், முதலாவது, மேன்மையான கல்வி, செல்வம், வயது, மதிப்பு என்று ஆணை உயர்ந்த நிலையில் வைத்து சம்பந்தமாகத் திருமணம் செய்து கொடுத்தல் (Hypergamy) இரண்டாவது, குழந்தை மணம், மூன்றாவது, கைம்மை நிலை என்ற கொடிய வழக்கங்களுக்குப் பெண்ணை உள்ளாக்குதல். தாழ்ந்த சாதி, தாழ்ந்த படிப்பு, தாழ்ந்த செல்வ நிலை, பெண்ணுக்கு இருக்கலாம். சரிசமமான வயதும்கூடத் திருமணப் பொருத்தமில்லை. பெண் அடங்கிப் போக வேண்டும். இந்த நாகரீகம் பெண்ணின் சுதந்திரமான உரிமைகளைப் பறிக்க முதல்படியாக வந்தது. கல்வி உரிமை போய், கற்பொழுக்கமும், குழந்தை மணமும், பெண்ணின் வாழ்வுக்குக் கடிவாளங்களாகப் பூட்டப் பெற்றதுடன், கைம்மைநிலை என்ற கொடிய தண்டனை அவள் செய்யாத பாவத்துக்கு உரியதாக ஆயிற்று. கைம்பெண் என்ற கொடுமை வேத காலத்தில் இருந்திருக்கவேயில்லை. கணவனுடன் மனைவியை எரிக்கும் பழக்கம், மிக மிகத் தொன்மையான காலத்தில் ஆரியர்