பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 காலந்தோறும் பெண் இந்தியாவுக்கு வருவதற்குமுன், இந்தோ, ஐரோப்பியக் குடிமக்களிடையே இருந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவுக்கு ஆரியர் வந்த காலத்தில் இது நடைமுறையில் இல்லை. ருக் வேதத்தில் காணப்படும் ஒரு பாடலிலும்கூட, அக்ரே' என்ற சொல், அக்னே' என்று திருத்தப்பட்டதன் சான்று வெளிச்சமாகிறது. கணவன் இறந்ததும் மனைவியைத் தீயில் புகும்படி செய்வதற்கு ‘வேத அங்கீகாரம்’ வேண்டுமே? உண்மையில் பெண்ணுக்கு வாழச் சகல உரிமைகளையும் கொடுக்கும் பாடல்களாக அல்லவோ ருக் வேதத்தில் இருக்கிறது? பிற்காலத்திய பண்டிதப் புலிகள் கண்களில் நெய்யூற்றிக் கொண்டு பாடல்களைத் துழாவினார்கள். ங் ஓ! பெண்மணியே! நீ இன்னும் இவ்வுலகில் வாழ வேண்டியவள். அவன் உயிர் போய்விட்டது; நீ இங்கே வா. இன்னொரு கணவரைத் தேர்ந்துகொண்டு தாயாக வாழ்வாய்-என்று அழைக்கும் பாடல் இருக்கிறது. தொடர்ந்து “மங்கலப் பெண்டிரே, தாயாரே துயரின்றி, கண்ணின்றி, முன்னே ஏகுவீர், அவளை மீண்டும் வாழ்வுக்குரியவளாகச் செய்வீர்.” என்று பொருள் படும் பாடல், அந்த இடத்திலேயே அவர் கையை விரும்பி ஏற்கும் ஆணுக்குரியவளாகச் செய்யும் மறுவாழ்வுக்கு வழிவகுக்கிறது. இந்தப் பாடலில், முன்னே என்று பொருள்படும் சொல் என்று நுட்பமாகத் திருத்தப் பட்டிருக்கிறது. முன்னே அழைத்து வரவேண்டாம்-நெருப்பில் தள்ளலாம் என்று, வேதம் சொல்வதாக, அநுமதி பெற்று விட்டார்கள்; மனச்சாட்சிக்கா, அல்லது மறுக்கும் நியாயவாதிகளுக்கா என்று தெரியவில்லை. இந்தப் பாட்டைக் கண்டுபிடித்தவர், வேதநூல் ராய்ச்சியாளராகிய மாக்ஸ்முல்லர் என்றும், வில்லன் =월, CL/> Q/