பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 101 என்றும் சொல்லப்படுகிறது. வேதங்களில் மட்டும் இவ்வாறு புரட்டுகளைச் செய்திருக்கவில்லை. பின் எழுதப்பட்ட கோட்பாடுகளிலும் பெண்ணை நசுக்குவதற்குரிய கூறுகள் தந்திரமாகப் புகுத்தப்பட்டன. பெண் சமுதாய உற்பத்திக்கான மக்களைப் பெற்றுப் பேணுகிறாள். அவளை எந்த நிலையிலும் பாதுகாக்க வேண்டும். இளமையில் தந்தையும்; பின்னர் கணவனும்: முதுமையில் மகனும் அவளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று விதிக்கப்பட்ட சாத்திரக் கோட்பாடே, பெண் இளமையில் தந்தையின் ஆளுகையிலும் பின்னர் கணவனின் ஆதிக்கத்திலும், முதுமையில் மகனுக்குக் கீழ்ப்பட்டும் இருப்பதற்கு உரியவள், சுதந்திரம் அவளுக்குரியதல்ல என்று ஒரே போடாக மாற்றப்பட்டது. ஆனால் இந்த மனுவும்கூட, பெண் கணவனை இழந்ததும், முடியை இழந்து மூடுண்டவளாக மூலையில் முடங்க வேண்டும் என்று சொல்லவில்லை; நிச்சயமாக இல்லை. இப்போது, இந்தச் சமயக் குரவர்கள்தாம் வைதீகமான தரும சூத்திரக் கோட்பாடுகளின் படி சமூகத்தைப் பரிபாலிக்கிறார்களாம். பதைபதைக்கும் வுெயிலில் வாயிலில் வந்து நிற்கும் பெண்களை, குரூரமான கோடிமுத்துத் தடுத்து நிறுத்தும் அநாகரிகம், எந்த வைதீக தருமத்துக்கு உரியது?