பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் - 129 காப்பாளராக இருந்தவர்கள் கால்களால் உதைத்துவிட்டுக் கைகளை மடக்கிக் கொண்டனர். எனவேதான் பாலனம்’ என்ற பொறுப்பு விடுபட்டு, எந்நாளிலும் பெண் சுதந்தரமாக இருக்கத் தகுதியற்றவள்: இன்னின்ன காலங்களில் இவர்கள் ஆளுகைக்குட்பட்டவளாக இருக்கிறாள் என்று மாற்றப்பட்டது போலும்! ஐந்து கணவர்களும் கைவிட்டதும் பாஞ்சாலி கண்ணா? என்று கூவி அழைத்தாள். புதிது புதிதாய், வண்ண வண்ண மாய் காவியத்தில் சேலை வளர்ந்தது. ஆனால் அன்னாள் நடுத்தெருவில் தள்ளப்பட்ட அபலைகளுக்கு அப்படிக் கூவக் கூடத் தெரியாதே? எனவே சாவதைத் தவிர வேறு வழி யில்லை என்றாயிற்று. வரலாற்றுக்கால “ஸதி' வழக்கில் வந்தது. அரச குலப் பெண்களே கொத்துக் கொத்தாக எரி வளர்த்துப் புகுந்தார்கள். 19. சதி புராணம் இவ்வாண்டின் தொடக்கத்தில் வங்கத் தலைநகரில் நிகழ்ந்த பாரதீய பாஷா பரிஷத் அமைப்பின் பரிசளிப்பு விழாவை ஒட்டிப் பரிசு பெற்ற நூல்களை அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. பரிசு பெற்றவர்களில் ஒருவரான இராஜஸ்தானத்து நூலாசிரியர் தனது கட்டுரைத் தொகுப்பு நூலைப் பற்றிய கருத்தை உரைத்தார். இராஜஸ்தானத்துப் பெருமைகளையும் மாண்பையும் விளக்கும் அந்நூலில், கற்புடைப் பெண்டிர் பற்றியும் வருகிறது போலும்? இராஜபுதனத்து நங்கையர் தீக்குளித்து ‘சதி தர்மம் காத்ததைப் புகழ்ந்தும், இன்னமும் கா.பெ. - 9