பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 காலந்தோறும் பெண் அடுக்குகிறீர்களே? அவள் எழுந்திருக்கவே இயலாதபடி பெரிய மூங்கில் தடிகளை வைத்து அழுத்துகிறீர்களே? ஹரிதரும் மற்ற முனிவர்களும் இதையெல்லாம் சொல்லி இருக்கிறார்களா..?” இது அப்பட்டமான பெண் கொலை தவிர வேறொன்று மில்லை. இந்தியப் பெண்களின் அவல நிலை, அரசாள வந்த அந்நியருக்கும்கூட உறுத்திற்று. வில்லியம் பெண்டிங், சதி ஒழிப்பைச் சட்டமாக்கித் தீர்த்தார். நூற்றாண்டுகளாக அடக்கிப் பதப்படுத்தப்பட்ட இந்தியப் பெண்மை, மாற்றாரின் பரிவுக்கும் ஆதரவுக்கும் பாத்திரமானது வியப்பில்லை. அவர்களின் மென்மையுடைய பரிவும் பொறுக்கும் திறனும், உண்மையான உள்ளொழுக்கமும், தங்களுக்கு எத்தகைய கொடிய சோதனைகள் நேரிட்ட போதிலும் அமைதியுடன் ஏற்றுக்கொள்ளத் துணை புரிந்தது. பல ஆண்டுகளுக்கு முன் டெல்லி தலைநகரம், மற்றும் முகலாய அரசர்கள் வாழ்ந்த இடங்கள், சமாதிகள் என்று சுற்றிப் பார்க்கச் சென்றபோது அக்பரின் வாழ்விடத்துக்கு வந்தபோது, அவரை மணந்த ராஜபுதனப் பெண்மணியின் மாளிகை என்று காட்டினார்கள். இந்திய பாணியில் உப்பரிகை, துாபிகள் என்று விளங்கிய மாளிகையைப் பார்த்தேன். அக்பர் ஒரு போச்சுகீசியப் பெண்ணைக்கூட மணந்திருந்ததாகவும் கூறி அந்த இருப்பிடத்தையும் காட்டினார் வழிகாட்டி, அவருக்கென்று உள்ளே தனி மாதா கோயில் போன்ற தொழுகை இடமும் இருந்ததாக நினைவு. ஆனால், என் சிந்தையை முற்றிலுமாக நிறைத்துக் கொண்டவர், அந்த ராஜபுதனத்துப் பெண்மணி ஜோத்பாய். அக்பர், சிறந்த இராஜதந்திரியாக, இரு சமயப் பரம்பரையினரையும் ஒன்றிணைப்பதான பெயரைப் பெற, இத்தகைய கலப்புத் திருமணங்களுக்கு ஆதரவாக இருந்தார். ஒரு மன்னர் மன்னன், கரம் நீட்டி, தாழ்ந்த இடத்திலிருந்தும் துாக்கிவிடுவதால் அழியாப் பெருமை பெறுகிறான்.