பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 காலந்தோறும் பெண் அறிவுக் கண்கள் சமையலறை இருட்டிலும், பிள்ளைப் பேற்று அறையிலும் குருடாக்கப் பெற்ற காலங்களில் எத்தனை 'ஆதாரங்கள் மாற்றப்பட்டனவோ? திருத்தப்பட்டனவோ? . எனினும், ஆராய்ச்சி அறிவுப் பாதையில் பட்டறிவு பெற்றிராத நான், எங்கேனும் கிடைக்கக்கூடிய, ஆதாரங்களைத் தேடிப் பற்றிக்கொள்ள முற்பட்டு, உங்களுடன் சேர்ந்து சிந்திக்கத் துணிகிறேன். * இந்தத் துணிவுக்கு, ஆதாரங்களைக் காட்டிலும் ‘பிரத்தியட்சங்கள் விளக்கமாக உறுதியளிக்கின்றன. கரைகாணாக் கடலில் பயணம் செய்கையில், கடல்நீரில், செடி, கொடிகள், நிலத்தாவரங்களின் சான்றுகள் காணப்பட்டால் நிச்சயமாகக் கரை இருக்கிறதென்றுதானே பொருள். ‘பாவங்களுக்கு மன்னியுங்கள்!” என்று பிரார்த்தனை வருமானால், மனிதன் மனச்சாட்சிக்கு மாறாகச் செயல்புரியத் துவங்கிவிட்டான் என்பதுதானே உண்மை! காலந்தோறும் பெண்ணின் நிலைபற்றிய இந்தத் தேடல் முயற்சிக்கும், இத்தகைய கண் உறுத்தும் தடயங்களே ஆதாரங்களாகப் பற்றிக்கொள்ளச் செய்கின்றன. முதல் சான்று 2. பெண்ணுக்கு மட்டும் கடவுள் வாழ்த்தை வலியுறுத்தும் பத்துக் குறட்பாக் களையும் படிக்கிறோம். வாலறிவன் நற்றாள் தொழார் எனின் பெற்ற கல்வியும் பயனில்லை. தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.