பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 காலந்தோறும் பெண் சாவித்திரி தன் பெற்றோருக்கு நூறு புத்திரர்கள் பெற வரங் கேட்டதாகச் சொல்வதுண்டு. "அப்படி நூறு என்பது வாழ்த்துச் சொல்லாக இருந்த காலத்தில், அது வழக்கு வாழ்த்துத்தான். உண்மையில் பத்துப் புதல்வர்களுக்கு மேல், நீ ஒரு வாழ்க்கையில் சுமக்க வேண்டாம். ஏனெனில் நீ வாழ்நாள் முழுவதும் கணவனைப் பேணிக் காக்க வேண்டும். இதனால் பத்துக்கு மேல் பதினோராவது மைந்தன் கணவனே என்று வைத்துக்கொள் என்று குடும்பக் கட்டுப்பாடு அறிவுறுத்தப் பெறுகிறது. “உன் கணவன் முதுமை நிலை அடைந்துவிட்டான் என்று அலட்சியம் செய்துவிடாதே! அவனையே புதல்வனைப் பேணுவது போன்ற வாஞ்சையுடன் பாதுகாத்து வா!” என்றும் மறைமுகமாக வற்புறுத்துகிறது இப்பாடல் அடிகள். ஆக, இந்த மூன்று வரிகளையும், ருக் வேத காலத்திலிருந்து திருமண மந்திரங்களில் வைத்து இன்றளவும் சொல்லும் முறை வழக்கில் வந்திருக்கிறது. இந்த வழக்கு, ஒருவகையில் குருட்டுத்தனமாகவும், முட்டாள்தனமாகவும், கருதும்படியும் தொடர்ந்து வருகிறது. ஒரு சமயம், தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டப் பகுதியில் ஒரு புராதன முருகன் கோயிலில் குருக்கள் நிறைந்த ஈடுபாட்டுடன் கணிரென்ற குரலில் முருகனின் திருநாமங் களைக் கூறி, வழிபடுபவர் மனமொன்றித் துதிக்கும் வண்ணம் அர்ச்சனை செய்ததைக் கேட்டேன். பிரசாதத் தேங்காய் மூடித் தட்டை, என்னிடம் கொடுக்கையில் அவர் மொழிந்த ஆசி மொழிகள் ஒரு கணம் என்னை அதிர்ச்சியுறச் செய்தது. “தசாஸ்யாம் புத்ரானாம் தேஹறி! பதிம் ஏகாதசம் க்ருதி” என்ற வாசகத்தைக் கேட்டால் பின் எப்படி இருக்கும்? இதையேனும் ஒரளவு சீரணித்துக் கொள்ளலாம்.