பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 155 என் நெருங்கிய உறவினர். கணவன் முகத்தை நன்றாகப் பார்த்தறியாத குழந்தைக் கைம் பெண்ணாக வாழ்க்கையைத் தொடங்கி, சகோதரர்களின் ஆதரவில் வாழ்ந்தவர். அவருடைய அந்தச் சகோதரருக்கும் மனையாளில்லை. இந்த அம்மையார் ஆண்டுதோறும் தன் கணவனுக்குப் பிதிர்க் கடன் ஆற்ற திதி கொடுப்பார். அவருக்குத்தான் முப்புரி நூல் கிடையாதே? எனவே, தம்பி, அவள் கைத்தருப்பத்தை வாங்கி, அந்தக் கடனைச் செய்வான். அந்த அம்மை தனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து திவசம்’ செய்து வந்திருப்பவளாக இருக்கும். ஏன்? கல்யாணம் என்ற ஒன்றின் பலனே, அவளை முண்டனம் செய்து அலங்ககோலப்படுத்துவதற்கும், இறந்தவனுக்குச் சிரத்தையாக இத்தகைய நீர்க்கடன்களை நிறைவேற்றுவதற்கும் என்றே முடிந்திருக்கிறது. அத்தகையதொரு திதி நாட் சடங்குகளை நான் நேரில் காணும் சந்தர்ப்பம் ஒரு சமயம் வாய்த்தது. அப்போது அவருக்கு எழுபத்தைந்து வயதிருக்கலாம். சகோதரனும் அறுபதைக் கடந்தவர்-சடங்குகள் முடிந்த பின் இறுதியில் மங்கள வாசகம் கூறிப் புரோகிதர் முடிக்கையில், “தசாஸ்யாம் புத்ரானாம் தேஹறி பதிம் ஏகாதசம் க்ருதி!” என்றாரே பார்க்க வேண்டும்! நான் நிச்சயமாக என் செவிகளையே நம்பவில்லை. ஆனால், புரோகிதர் அதே சொற்களைத்தாம் சொன்னார். அவளுக்கும் புருஷனில்லை; தம்பிக்கும் மனைவியில்லை. இறந்துபோய் இருந்தாள்) பின் இந்த ஆசி மொழிகளின் பொருள் என்ன? என்னுள் இந்த முரண்பாடுகள் புழுவாகக் குடைய லாயிற்று. வைதீக சம்பந்தமாக நடைபெறும் எந்த நிகழ்ச்சிகளிலும், மங்கள, அசுப, அல்லது தெய்வீகமான சமயம் சார்ந்த எந்தக் கூட்டத்திலும், பெண் வருக்கத்துக்கு என்ற இரண்டாம்