பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 161 மணமகனும் தத்தம் ஆடைகள் முடிச்சால் பிணிக்கப்பட்ட நிலையில் வலம் வரும் இச்சடங்கு இன்றளவும் நம் இந்தித் திரைப்படங்களில் கூடப் பின்பற்றப்படுகிறது-திருமணச் சடங்கின் முக்கிய நிகழ்ச்சியாக. தீயைச் சுத்தி, ஏழடி இணைந்து வைக்கும் இச்சடங்குக்குரிய மந்திரம், மிகத் தொன்மையான காலத்தில், (சத்யவிரதன் வரலாறு குறிப்பிடப்படும் புராண காலம்) மணமகளைப் புறச்சின்னம் எதையும் சுமக்கச் சொல்பவளாக இல்லை. மேலும் இந்த மந்திரப் பாடலின் மொழிகள், ஒருவருக்கு மற்றர் உட்பட்டதான குறிப்பைப் புலப்படுத்துவதாகவும் இல்லை. நாங்கள் உள்ளார்ந்து அன்பு கொண்டு இணைந்தவர்களாய் வாழ்க்கைப் பாதையின் துவக்கமான ஏழடிகளை வைத்து ஒன்றுபடுகிறோம் என்று உறுதி பூணும் மகிழ்ச்சிச் செய்தியைப் பலர் முன் அக்கினி சாட்சியாக அறிவிப்பதாகவே இச்சொற்கள் விளங்குகின்றன. 1. இந்த வாழ்வின் உயிர்ப் பசுமையின் இணைப்பால் நாம் ஒரடி வைப்போம். 2. உயிர்த்துவத்தின் ஆற்றலாய் ஈரடி வைத்து முன் ஏகுவோம். 3. வண்மையும் செழுமையும் கொழிக்க மூன்றாம் அடியை வைப்போம். 4. இன்பத்துக்கும் மகிழ்ச்சிக்கும் நாம் இணைந்து நான்காம் அடி வைப்போம். 5. நல்ல சந்ததிகளைப் பெற இருவரும் கூடி ஐந்தாம் அடி வைப்போம். 6. ஒருவருக்கு மற்றவர் என்று உறுதியாய் நிலைப்போம் ஆறாம் அடியில் கா.பெ. - 11