பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 காலந்தோறும் பெண் 6. விஷ்ணு, உனது ஆறாவது அடியை சப்தருவிகளின் ஆசிகளோடு நடாத்திச் செல்லட்டும். 7. இந்த ஏழாவது அடியுடன், நீ எனது தோழியாகிறாய்! இந்தச் சப்த பதிக்கும் முந்தைய சப்த பதிக்கும் இடையே உள்ள வித்தியாசங்களைப் பாருங்கள்! உணவின் தேவைக்கு (அவளுக்கும்தான்.உழைத்தாலே உணவு!) குடும்பத்துச் சமையல்காரி, உடல் வலிமை, வைத்த சுமையை ஏற்று, உழைக்க வேண்டுமே? விரதங்கள்-தவங்கள்சுயநலங்கள், சுயதேவைகள் சுருக்கி, கணவன் வீட்டாருக்காக உயிர்வாழும் பொருட்டு-உழைக்கும் பொருட்டு, சில பழகு நெறிகளில் விரதங்கள் தவங்களைக் கைக்கொள்ள வேண்டும். நட்பின் மலர்ச்சி.இத்தனை சுமைகளையும் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஏற்கலாமா? சிரித்த முகத்தோடு “இது என் பேறு” என்று ஏற்க வேண்டும். கன்று காலிகளாகிய வளர்ப்புப் பிராணிகள் உனது ஜீவாதார உரிமைகளைக் காட்டிலும் அருமையானவை. வளமை பெருக்கும் செல்வங்கள். எனவே இந்தப் பொரு ளாதார வளமை எக்காரணம் கொண்டும் உன்னால் அலட்சிய மாகக் கருதப்படலாகாது! அது ஒங்க வேண்டும். சப்த ருவிகள் பூசனைக்குரியவர்கள். இவர்கள் தந்தையார் (தாய்வழிச் சமுதாயப் பரம்பரை என்ற ஒரு உணர்வின் ரேகை கூட உன்னிடம் மிஞ்சலாகாது. தந்தையர். ருவிகளே தலைவர்கள்) இவர்கள் அருள் தேவை. இத்தனை அடிகளையும் வைத்த பிறகு (நிபந்தனைகளுக்குப் பிறகு) நீ என் தோழியாவாய்! தோழமை என்ற பெயரில் வளையம் நெருக்கும்போது, அவள் உண்மையில் தோழியாகவா இருக்க முடியும்? தோழி என்ற பெயரில், நெருக்கப்பட்டு, இயக்கப்படுகிறாள் என்பதே Hg, GTUTIJTGüDLD.