பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் - 169 கேட்டால், “அவள் ஒத்துக்கொள்வாளா? குதிக்கத்தான் குதித்தாள். அந்த ஆளைப் போய்க் கேட்பேன் என்றுதான் கிளம்பினாள். பெரியவங்க எல்லாம் குறுக்க விழுந்து அப்படி யெல்லாம் கேட்டு கலியாணத்தை நிறுத்தினா, உனக்கு இந்த ஆயுசில கலியாணம் ஆகாது. கலியாணம் இல்லாம நிப்பியா? முடியுமான்னு நிறுத்திவிட்டோம்.” என்று சிறிதும் தயக்கம் இன்றி ஒத்துக்கொள்கிறார்கள். திருமணமான நிலையிலேயே “பெண்’ என்பவள் வேட்டைக்குகந்த பிராணி என்ற சமூக (அவல) மதிப்பைப் பெற்றிருக்கும்போது, இந்த அபாயம். நீ கன்னியாயிருந்தால், எந்தக் கணமும் உன்னை விழுங்கக் காத்து இருக்கிறது என்ற கருத்தை அன்றாடம் நமது மக்கள் தொடர்பு சாதனங்கள் ஆணுக்கு ஊக்கமாகவும் பெண்ணுக்கு அச்சமாகவும் இடைவிடாது உருவேற்றிக் கொண்டிருக்கிறது. இந்தக் கருத்து எப்படி உருவாகி, நிலைத்து, இன்னும் நூற்றாண்டுக் காலங்களில் வலிமை பெற்று, பெண்ணை எந்த முன்னேற்றத்தின் பயனையும் பெற இயலா வண்ணம் பிணித்துக் கொண்டிருக்கிறது? இதைக் கூர்ந்து சிந்தித்தால், பெண்ணின் அறிவுக் கண்ணை மறைக்கும் ஒரு சாதனமாகவே திருமணம் அவளுக்கு வலியுறுத்தப்படுவதாகப் புலப்படுகிறது. இவள் அறிவு பெற்றுவிட்டால், சுயமாகச் சிந்திக்கத் தன்லைப்பட்டு விட்டால், ஒருபக்க நியாயங்களை உணர்ந்துகொள்வாளே? மேலும், வஞ்சிக்கப்படுபவர் விழித்துக்கொண்டால், காலம் காலமான பொய்ச் சித்தாந்தங்கள் புகையாகிப் போய்விடுமே? பிரஹத்தாரணிய உபநிடதத்தின் ஆறாவது பிராம் மணத்தில், யாக்ஞவல்க்யர்-கார்க்கி உரையாடல், இக்கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்றாக வேண்டும் என்று கருதுகிறேன்.