பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 காலந்தோறும் பெண் தொடர்புபடுத்திக் காட்டும். காளி அந்தத் தலத்தில் கோயில் கொண்டிருந்தாள். நடராசப் பெருமாள் அங்கு வந்ததும் இடத்துக்காக ஒரு போட்டி நடனம் தொடங்கியது. நடனத்தில், காளி அற்புதமாக ஆடினாள். நடராசப் பெருமானால் காளியை வெல்ல் முடியும் என்று தோன்றவில்லை. அவர் ஒரு தந்திரத்தைக் கையா ண்டார். ஒரு காலை ஆகாயத்தில் தூக்கினார். இந்த நடனத்தைப் பெண்ணாகிய காளியினால் பின்பற்ற முடியவில்லை. எனவே தலைகுனிந்து தன் தோல்வியை ஒப்புக்கொண்டாள். இடத்தை விட்டுக் கொடுத்து எல்லைக்கு அப்பால் சென்றாள் என்பது வரலாறு. த. பெண்ணை, இத்தகைய, கற்பொழுக்கம் சார்ந்த, ஒரு வரையறையில் பிணிப்பதை இந்நிகழ்வு அறிவுறுத்துகிறது. அவள் காலைத் துக்கி ஆடும் ஆட்டத்துக்குப் பாலியல் சார்ந்த ஒரு பொருளைச் சுட்டி, அவளைக் கட்டுப்படுத்துகிறது. அவளுடைய சுதந்திரத்தின் நாணம் என்ற ஒரு கடிவாளக் கயிறைப் பூட்டும் இந்த நெறி பெண்ணுக்குரிய அடிமைக் கலாசார மரபின் முதல் பிணிப்பாகப் புகுத்தப்பட்டது. இந்த நாணம் அவளைத் தன்னை எப்போதும் பாலியல் தொடர்பான ஒர் எண்ணத்திலேயே அமிழ்த்திக் கொண்டிருக்கும். அதைத் தொடர்ந்து, அச்சம், அறியாமை என்ற எல்லாம் அவளுடைய குண நலன்களாக’ வரையறுக்கப்பட்டு விட்டன. பேதைமை என்பது மாதர்க் கணிகலம்’ என்று போற்றப்பட்ட போது, கண்மூடிய அஞ்ஞானத்துடன், அதில் மகிழ்ந்து போயிற்று, இந்தப் பெண்குலம். இன்றும், அது தொடர்ந்து வருகிறது. துர்க்கை, காளி, பராசக்தி, மாரி என்ற தாய் வழிபாட்டுத் தெய்வங்கள் இந்நாளில், மூலை முடுக்குகள் விடாமல் பல பெயர்களில் கோயில் கொண்டுள்ளனர். சந்தோஷி மாக்கள், சீதளா தேவியர், கண்ணகி, பகவதி, என்று நாடு முழுதும்,